பக்கம்:காப்டன் குமார்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

போட்டுக்கொண்டு புறப்பட்டு வந்தவர், துண்டை உதறுவது போலவே பிறந்த பொன்னாட்டின் நினைவுகளையும் உதறிவிட்டார்.

இந்தியாவைப் பற்றி அவருக்கு என்றைக்குமே நல்ல எண்ணம் கிடையாது. ஆகவே அவர் என்றோ பர்மாப் பிரஜையாக மாறிவிட்டார். ஆகவே இந்தப் புதிய உத்தரவு அவரையும் சுவானையும் பாதிக்காது. ஆனால் குமாருக்கு? அவன் தந்தை பெரிய 'காந்தி பக்த' ராயிற்றே!

கண்ணீர் பளபளக்கச் சுவானையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த குமார் மறுகணம் குபீரென்று பாய்ந்து சுவானை மார்போடு இறுகக் கட்டிக் கொண்டான்.

"சுவான், நாம் இருவரும் ஒன்றாகப் பள்ளியில் சேர்ந்தோம். ஒவ்வொரு வகுப்பிலும் பாஸாகி ஒன்றாகவே தேறி முன்னேறினோம். ஆனால் இனிமேல் நாம் ஒன்றாக இருக்க முடியாதே, சுவான். உன்னை விட்டுவிட்டு நான் எப்படிப் பிரிந்து போவேன்?" என்று சுவானின் தோள்பட்டையில் முகத்தைக் கவிழ்த்துக்கொண்டு குமார் அழுதான்.

சுவானுக்கு இருதயமே வெடித்துவிடும்போல் இருந்தது. என்ன ஆறுதல் கூறி நண்பனைத் தேற்றுவது என்றே அவனுக்குப் புரியவில்லை. தனக்காவது தாயார் இருக்கிறாள், துன்பம் வந்தால் ஆறுதல் கூற. ஆனால் குமாருக்குத் தந்தையைத்