பக்கம்:காப்டன் குமார்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

அவரது அந்த எண்ணத்தை நண்பர்கள் தடுத்து நிறுத்திவிட்டனர்.

"பிறந்திருப்பது பெண் குழந்தை அல்லவா? இன்னும் 'ஒருமலை'ச் செல்வத்தைச் சம்பாதித்துக் கொண்டு கப்பலேறி, அதை இந்திய மண்ணில் கொண்டுபோய் இறக்குங்கள். பெண்ணை ஒரு பெரிய சீமானுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டு நிம்மதியாயிருங்கள்?" என்று ஓயாமல் உபதேசம் செய்தனர். அந்த வார்த்தைகள் அவருக்கு அப்போது இனித்தன. அதில் நியாயம் இருப்பது போல்தான் தோன்றியது. ஆனால் அவரது 'செல்வமலை’ கப்பலேறி இந்தியக் கரையை எட்டவே இல்லை. பர்மியக் கடலிலேயே கவிழ்ந்துவிட்டதே!

ஆம்! கையை வீசிக்கொண்டு வந்த இந்தியர்கள், கையை வீசிக்கொண்டு உடனே கப்பலேற வேண்டும் என்றுதானே பர்மா அரசாங்கம் விரட்டிக் கொண்டிருக்கிறது?

கனவிலிருந்து விடுபட்டவனைப்போல் குமார் ஒரு முறை நண்பனையே உற்றுப்பார்த்தான். தங்கை சாந்தியின் நினைவு வந்ததும், அவள் இப்போது எப்படி இருக்கிறாளோ? என்று உள்ளம் பறந்தது. ஆயினும் இனி நண்பனுடன் பேசும் சந்தர்ப்பமே வாய்க்காவிட்டால்?

"சுவான்...ரெடி பிளீஸ்...அப்படியே அந்தப் பூந்தொட்டியின் பக்கமாகச் சென்று நின்றுகொள்...