பக்கம்:காப்டன் குமார்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 படுத்துக் கிடந்தார். சுற்றிலும் பல டாக்டர்கள் கூடி ஏதோ பலத்த யோசனையில் ஆழ்த்திருந்தனர். அவர்கள் மத்தியில், கன்னங்களில் காயாத கண்ணிர்க் கோடுகளோடு, குழந்தை சாந்தி அழுத வண்ணம் வேலைக்காரன் திருமுருகுவின் கையைப் பிடித்துக் கொண்டிருந்தாள். குமார், தோளிலிருந்த பையைத் தூக்கி எறிந்து விட்டுத் தந்தையின் அருகில் ஒடினான். உயிரையே, காறி உமிழ்வதுபோல் ராமசாமிப் பிள்ளை பயங்கர மாக ஒரு முறை இருமினார். குமாரைக் கண்டதும், *அண்ணா!?’ என்று பெரிதாக அலறிய வண்ணம் சாந்தி ஓடிவந்து அவனது கால்களைக் கட்டிக் கொண்டாள். குமாரின் கண்கள் கலங்கின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/22&oldid=791230" இலிருந்து மீள்விக்கப்பட்டது