பக்கம்:காப்டன் குமார்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. முத்து மாலை == சூழ்ந்திருந்த டாக்டர்களையெல்லாம் பார்த்த வடன் குமாருக்குப் பெரும் கவலையாகி விட்டது. 'டாக்டர் ஸார்! எங்கள் அப்பாவுக்கு என்ன உடம்பு? ஒன்றும் ஆபத்தில்லையே? உங்கள் எல்லோரையும் பார்க்கிற போது அப்பாவுக்கு ஏதோ கடும் வியாதிபோலத் தோணுது பயமாயிருக்குதே, டாக்டர்?’ என்றான். so குமாரின் முதுகைத் தட்டிக் கொடுத்த டாக்டர், 'ஒன்றும் பயப்பட வேண்டியதில்லை. திடீரென்று ஏற்பட்ட அதிர்ச்சி இருதயத்தைப் பாதித்திருக்கிறது. நல்ல மருந்துகள் கொடுத்திருக்கிறோம். தைரியமாக இரு” என்று ஆறுதல் கூறினார். ஆனால் பிக்னிக்’ கிலிருந்து வந்த குமாரை அவன் தந்தை கண் திறந்து கூடப் பார்க்கவில்லை. டாக்டரின் வார்த்தை களிலே அவனது மனம் சமாதானம் அடைய மறுத்தது. s எட்ட நின்று கொண்டிருந்த திருமுருகுவிடம் சென்றான். குமாரைக் கண் ட து ம், 'சின்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/23&oldid=791232" இலிருந்து மீள்விக்கப்பட்டது