பக்கம்:காப்டன் குமார்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 மடிமீதும் வளர்ந்தகுழந்தைகள். கண்ணிலும் மேலாக எஜமான் எத்தனை செல்லமாக அவர்களை வளர்த் தார்! ஆனால் இன்று, அவனது எஜமானரே இறந்து விட்டார்-இல்லை...இல்லை அவரைக் கொன்று விட் டார்கள் பாவிகள். இது கொடுமையல்லவா? இரண் டரை லட்சம் சதுர மைல்கள் கொண்ட பரந்த மண் ணில் சில ஆயிரம் மக்களுக்கு மட்டுமா இடமில்லாமல் போய்விட்டது? அல்லது இத்தனை கோடி மக்களில் இந்தியர்கள் மட்டுமா வேண்டாதவர்கள் ஆகி விட்டார்கள்? கல்லையும் மண்ணையும் சீராக்கி, காட்டையும் மேட்டையும் அழித்து நகரத்திற்கு எழில் கூட்டினார் களே இந்தியர்கள், அவர்களுக்கு இதுவா பரிசு? ஒண்டவந்த இடம் என்று பேதம் காட்டாமல், சொந்த இல்லமாக அல்லவா இந்த மண்ணிடம் அன்பு செலுத் தினார்கள். ஐயோ! காலால் மிதிக்கும் மண்ணிற்கு ரப்பர்ப் பாலை வார்த்து மெத்தையாக்கிக் கொண்ட பர்மாநாடே, இந்தியர்கள் விஷயத்தில் நீ இதயத்தை பாறையாக்கிக் கொண்டது ஏனோ? என்னாங்க, இ ப் படி மலைச்சுப்போய் உட்கார்ந்துக்கிட்டேயிருக்கீங்க? குழந்தைகளை யும் கூட்டிக் கொண்டு சாப்பிட வாருங்க என்று திருமுருகுவின் மனைவி அழைத்தாள். குமார் தனக்குப் பசிக்கவே இல்லை, சாந்தி மட்டும் சாப்பிடட்டும் என்றான். திருமுருகு விட GTT - - 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/28&oldid=791242" இலிருந்து மீள்விக்கப்பட்டது