பக்கம்:காப்டன் குமார்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 வகுத்துச் சென்றவண்ணமிருந்தனர். முன்னே சென்றவன், திரும்பிக்கூட பார்க்கவில்லை - காறி உமிழ்ந்த எச்சிலைப் போல. ஆம் காலை வாரிவிட்ட மண்ணைக் திரும்பி என்ன பார்வை வேண்டிக் கிடக்கிறது என்ற வெறுப்பு. குருவி தானியம் சேகரிப்பதுபோல் சிறுகச்சிறுகச் சேமித்து வைத் திருந்தார்கள். பருந்தாக வந்து பறித்துக் கொண்டு விட்டார்களே இந்த பர்மியர்கள்! இன்று கை நிறையக் கொண்டு செல்வதற்கு அவர்களிடம் பணம் இல்லை; விழி நிறையச் சுமந்து செல்லக் கண்ணிர்தான் இருந்தது. விழிகள் வடித்த வேதனைக் கண்ணிரை விரல் களால் சுண்டி எறிந்தான் திருமுருகு. ‘ஹல்ம்... பூகம்பமோ, எரிமலையோ வெடித்து ஊர் அழிந்து மக்கள் பிச்சைக்காரர்களாவதில்லையா? அப்படி நினைத்துக் கொண்டால் போகிறது. ஆனால் பர்மாவை நம்பி வந்த இந்தியர்களுக்கு ஏற்பட்ட பூகம்பத்தில்-மனைவி மக்களாவது மிஞ்சினார்கள் அல்லவா? அதற்காகவே நன்றி செலுத்தலாமே!? துறைமுகத்தில் போலீசின் கெடுபிடி மிகவும் அதிகமாயிருந்தது. ஆடு மாடுகளைப் போல ஊர் முழுவதும் விரட்டிக் கொண்டுவரப்பட்ட இந்திய மக்கள், துறைமுகச் சந்தையில் மிருகங்களுக்கும் மோசமாக அவதிப்பட்டனர். இந்தியரை ஏற்றிச் செல்லவந்த கப்பல் கை நீட்டி அழைப்பதுபோல் கடலிலே அசைந்து கொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/30&oldid=791248" இலிருந்து மீள்விக்கப்பட்டது