பக்கம்:காப்டன் குமார்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 டிருந்தது. கபபல புறப்படுவதற்கான முதல் மணி யும் அடித்து விட்டது. எப்படியோ குமாரையும் சாந்தியையும் திருமுருகு சாமத்தியமாகக் கப்பலில் ஏற்றி விட்டான்.மனத்தில் இருந்த பெரும் சுமை இறங்கி விட்டதுபோல் இருந்தது. ஆனால் அதே சமயத்தில், கப்பலிலிருந்து சாந்தி இறக்கப்படுகிறாள் என்பதைத் திருமுருகு அறிந்திருந்தால், அவன் சிக்சிரம் வீட்டிற்குப் போயிருப்பானா? சாந்தியின் கழுத்தில் இருந்த விலையுயர்ந்த முத்துமாலையைச் சுங்க அதிகாரி பார்த்து விட்டான். ஆனால் அவன் அதைச் சாவடியிலேயே கவனித் திருக்க வேண்டும்; தவறிவிட்டான். அவன் செய்த தவறுக்காகப் பிறருக்குத் தண்டனை விதித்தான். சாந்தியையும் அ ைழ த் து க் கொண்டு சுங்கச் சாவடிக்குக் கிளம்பினான்; குமார் வழிமறித்தான். உங்களுக்கு மாலைதானே வேண்டும்? தாராள மாய்க் கழற்றி எடுத்துக் கொண்டு என் தங்கையை விடுங்கள்?’ என்றான். அதிகாரி முறைத்துப் பார்த் தான். என்பதுக்கி எடுத்துக்கொண்டு போவதில் விறைப்பு வேறா? விடு வழியை! சாவடிக்குப் போய் மேல் அதிகாரியின் உத்தரவு இல்லாமல் நாங்களாக ஒன்றும்செய்ய முடியாது’’ என்று மேலே நடந்தான். உடலிலும் உள்ளத்திலும் முரடனான அந்த அதிகாரிக்கு ஈடு கொடுக்கச் சிறுவனான குமாரால் எப்படி முடியும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/31&oldid=791250" இலிருந்து மீள்விக்கப்பட்டது