பக்கம்:காப்டன் குமார்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 பக்க பலமும் இல்லை; கூடியிருந்தவர்கள் எல்லாம் கோழைகளாக மெளனம் சாதித்தனர். வேறு வழியின்றி அதிகாரியின் கால்களைப் பிடித்துக் கொண்டு, 'நானும் கூட வருகிறேன். என்னையும் சாவடிக்கு அழைத்துச் செல்லுங்கள்?’ என்று குமார் கண்ணிர் விட்டுக் கெஞ்சினான். ஆனால் அதிகாரி யின் காதிலிருந்த ஹியரிங் எய்டு தான் எப்போதோ கீழே விழுந்து விட்டதே!

  • அநாவசியத் தொந்தரவு கொடுக்காதே’’ என்று தன் கால்களை உதறிக் கொண்டு சென்று விட்டான். அண்ணா! அண்ணா!” என்று அழுது சாந்தி கப்பலையே கி டு கி டு க் க வைத்துக் கொண்டிருந்தாள்.

கூட இருந்தவர்கள் குமாரைச் சமாதானம் செய்தார்கள். இப்பவே பரிசோதனை நடத்தி உன் தங்கையை அனுப்பி விடுவார்கள், பொறுமை யாக இரு’’ என்று. ஆனால் அவன் கேட்டால் தானே?

  • அவளுக்கு ஒன்றும் தெரியாது; நானும் கூடப் போவேன்?’ என்று அடம் பிடித்துக் கொண்டிருந் தான். கப்பலில் எட்ட நின்று கொண்டிருந்த ஒரு பர்மிய அதிகாரி குமாரைக் கரகரவென்று இழுத்துச் சென்று உள்ளே தள்ளினான்.

இறுதி மணியும் அடிக்கவே, கப்பல் புறப்பட்டு விட்டது. குமார் கரையை நோக்கி, சாந்தி! சாந்தி!?? என்று கத்தினான். அவன் சாந்தியைக் கரையிலும் காணவில்லை; கப்பலிலும் காண வில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/32&oldid=791252" இலிருந்து மீள்விக்கப்பட்டது