பக்கம்:காப்டன் குமார்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கப்பல் பயணம் கப்பலின் விளிம்பைப் பிடித்தவண்ணம் கரை யையே பார்த்துக் கொண்டிருந்தான் குமார். ரங்கூன் துறைமுகம் ஒரு சிறு புள்ளியாகத் தோன்றி மறையும் வரை அந்தத் திசையையே பார்த்துக் கொண்டிருந் தான். ஆமாம்! அந்தப் புள்ளியிலே ஒரு புள்ளியாக அவன் அருமைத் தங்கையும் அங்கேதானே இருக் கிறாள்? கண்களிலிருந்து வடிந்த கண்ணிர் உதட் டிலே தேங்கி உப்புக் கரித்தது. ஏன் தம்பி, இப்படி எத்தனை நாளைக்கு நின்னு அழுதுக்கிட்டே வரப்போறே? இதோ பாரு, எங்களை நாங்கள் எல்லாம் என்ன சந்தோஷமா கவா பொறந்த நாட்டுக்குப் போகிறோம்? ஆயுசிலே பாதியை நன்றிகெட்ட பர்மாக்காரனுக்கு உழைத் தோம். சம்பாதித்தையும் வருகிறபோது பிடுங்கிக் கிட்டு விரட்டிட்டான். தர்மம், நியாயம் பார்த்தா உலகத்திலே காரியங்கள் நடக்குது? வா, இப்படி! எங்க பக்கத்திலே வந்து குத்திக்கோ’’ என்று ஒரு வயதான பெரியவர் குமாரிடம் இரக்கம் காட்டி ஆறு தல் கூறி அழைத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/33&oldid=791254" இலிருந்து மீள்விக்கப்பட்டது