பக்கம்:காப்டன் குமார்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 அதுக்கில்லே மாமா! எங்கப்பா பர்மாவிலே உங்களையெல்லாம் விட நிறைய சம்பாதித்தார். எங் களுக்குப் பெரிய வீடு, மில்லு, கடை எல்லாம் இருந் தது. அதையெல்லாம் பர்மாக்காரர்கள் கண்மூடித் திறப்பதற்குள் பிடுங்கிக்கொண்டு விட்டார்கள். அந்த அதிர்ச்சியைத் தாங்கமாட்டாமல் அப்பா திடீரென்று மாரடைத்து இறந்துபோனார். அப்போதுகூட நான் அதிகம் அழவில்லை. ஆனால் என் தங்கை சாந்தி சிறியவள். அவளுக்கு ஒன்றும் தெரியாது. செல்ல மாக வளர்ந்தவள். பசி வந்தால் துடிதுடித்துப் போவாள். அநியாயமாய் என்னைவிட்டு அவளைப் பிரித்துவிட்டார்களே, மாமா: அவள் எங்கே. என்ன கஷ்டப்படுகிறாளோ? என்று கூறும்போதே குமாருக்கு அழுகை வந்துவிட்டது. ஒன்றும் கஷ்டப்படமாட்டாள், நீ தைரியமாக இரு. தெய்வம் அப்படியெல்லாம் ஒன்றும் யாரையும் சோதனை செய்துவிடாது. அதோ பார், ஒரு குடுகுடு கிழவி-வயது எண்பதாகிறதாம். அவளு டைய இரண்டு பிள்ளைகளையும் பாவிகள் இதே போல்தான் பிரித்து நிறுத்திவிட்டார்கள். தன்னந் தனியாக உன்னைப்போல்தான் வருகிறாள். இந்தக் கப்பலில் கொஞ்ச நேரத்திற்குள் நானும் விசாரித்து விட்டேன். கணவனைப் பிரிந்த மனைவி, அண்ண னைப் பிரிந்த தங்கை, மகனைப் பிரிந்த தாய்’ உன்னைப்போல் தங்கையைப் பிரிந்த அண்ணன், நிறைமாதக் கர்ப்பிணிகள்-இப்படி ஒரே அநுதாபத் திற்குரியவர்கள்தான் கூடியிருக்கிறோம். பாவிகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/34&oldid=791256" இலிருந்து மீள்விக்கப்பட்டது