பக்கம்:காப்டன் குமார்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 யார் கேட்பது? தப்பு எல்லாம் நம் பேரிலேதான் இருக்கு: நம்மை அவன் கூப்பிட்டானா, விரட்டிவிட் டான் என்று அழ! சரிசரி-வா, ஒன்றுக்கும் கவலைப் படாதே. உன் தங்கை எப்படியும் பத்திரமாக அடுத்த கப்பலில் வந்து சேருவாள்?’ என்று குமாரை அழைத்துச் சென்று தம் பக்கத்தில் அமர்த்திக் கொண்டார். பெரியவருடைய பேச்சினால் சற்று ஆறுதல் அடைந்தவன் போல் குமார் காணப்பட்டான்; என் றாலும், அவன் மனம் சமாதான மடைந்து விட வில்லை. சாந்தியை நினைத்து அவன் உள்ளம் துடித்துக் கொண்டேதான் இருந்தது. ஏன் தம்பி! உன்னுடைய பெயர்என்ன என்று சொன்னாய்? பெரியவர் அவன் மனதை மாற்ற ஏதேதோ பேச்சுக் கொடுத்தார். குைமார்!??

  • உன் தங்கையின் பெயர்???

சொந்தி?? ஆமாம், அப்பாதானே இறந்துவிட்டதாகச் சொன்னாய்? அம்மா எங்கே இருக்கிறாள் என்று சொல்லவில்லையே குமார்!’’ பெரியவர் சகஜமாக உரிமையோடுதான் கேட் டார். அதற்குள் குமாரின் கண்கள் குளமாகிவிட்டன. கையைத் துாக்கி உயரே காண்பித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/35&oldid=791259" இலிருந்து மீள்விக்கப்பட்டது