பக்கம்:காப்டன் குமார்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 பறந்து உலகமெங்கும் சுற்றி வர வேண்டும் என் பதெல்லாம் அவன் கனவு. ஆனால் இதே கப்பலில் சாந்தியும் இருந்தால்அதாவது அவளை அந்தக் கொடியவன் இறக்கி விடாமல் அவளும் தன்னுடனேயே இப்பொழுது வந்து கொண்டிருந்தால் - இந்தப் பயணம் எவ் வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்! அைது என்ன அண்ணா? இது என்ன அண்ணா? என்று எத்தனை கேள்விகள் கேட்டுத் துளைத்து எடுத்து விடுவாள்? நீலநிற ஆகாயத்திலே மேகத்திரள் போல வெள்ளை நிறக் கொக்குகள் கூட்டம்கூட்டமாகப் பறந்து செல்வதும்; சரேலென்று அவை நீரில் பாய்ந்து மீனைத் தூக்கிக்கொண்டு கிளம்புவதும் எவ்வளவு அழகான காட்சி! இதையெல் லாம் சாந்தி பார்த்தால் துள்ளிக் குதிப்பாளே! சாந்தியின் நினைவு வந்ததும் அவன் மீண்டும் துவண்டு விட்டான். அழ அழ அவளை அந்த அதி காரி பிடிவாதமாக இழுத்துச் சென்ற காட்சி அவன் கண்முன் வந்து நின்றது. துறைமுகத்தில் சாந்தி அநாதையைப்போல் அழுதவண்ணம்த்நிற்கிறாள். சாதுவான மீனைத் தூக்கிச் சென்ற நாரையைப் போல ஏதோ துஷ்டர் கள் கூட்டம் அவன் தங்கையை தூக்கிச் சென்று விடு கிறது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/40&oldid=791268" இலிருந்து மீள்விக்கப்பட்டது