பக்கம்:காப்டன் குமார்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 உதவியாக இருந்தான். அவர்கள் கழுவிப் போடும் தட்டுக்களையும், சிறிய ஸ்பூன்களையும் துணியால் துடைத்து மீண்டும் பெட்டிகளில் அடுக்கினான். சிறிது நேரத்திற்குள் தனது சேவையினால் அத் தனை பேரது மனத்தையும் கொள்ளை கொண்டு விட்டான். தி. வயதானவர்கள் கொண்டு வந்த மூட்டைகளை பிரித்து அவர்களது படுக்கைகளை எடுத்துக் கொடுத்துப் படுக்கவைத்தான். குமாரைத் தன் அருகில் கிடத்திக் கொண்டு பெரியவரும் படுத்து விட்டார். அநேகமாக எல்லோரும் படுத்துவிட்டார் கள். - பகல் முழுவதும் ஒவ்வொருவரும் பட்ட மன உளைச்சலும் கொஞ்சமா? கிடந்தவுடன் கட்டை யானார்கள். தாலாட்டுவதுபோல் கப்பல் ஆடி அசைந்து கொண்டிருந்தது. காலம் ஆமை வேகத்தில் மெல்ல கரைந்து கொண்டேயிருந்தது. குறட்டை ஒலி, கப்பலுக்கு போரா கொடுத்துக் கொண்டிருந்தது. -- குமார் மட்டும் இமைக்கவே இல்லை. எங்கும் மையிருட்டு, சுற்றுமுற்றும் பார்த்த வண்ணம் குமார் மெதுவாகத் தலையைத் தூக்கினான். அடித்துப் போட்டதுபோல் அனைவரும் தூங்கிக் கொண்டிருந் தனர். இதுதான் சமயமென்று எழுந்தான் குமார். முன்னரே யோசித்து முடிவு செய்திருந்தபடியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/43&oldid=791274" இலிருந்து மீள்விக்கப்பட்டது