பக்கம்:காப்டன் குமார்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 ஏமாற்றப்பட்ட பிஞ்சு உள்ளம் அதையெல்லாம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. குழந்தையின் பெரும் அழுகையைக் கேட்டு அங்கே ஒரு கூட்டம் கூடிவிட்டது. அதைத் தொடர்ந்து போலீஸ் கெடுபிடி எழுந்தது. சாந்தி யின் கண்கள் மட்டும் அத்தனை கூட்டத்திலும் யாரையோ வெகு ஆவலுடன் தேடிக் கொண் டிருந்தன. அது வேறு யாருமில்லை; திருமுருகு இருக்கிறானா என்றுதான் அவளது பேதைக் கண் கள் துழாவின. ஆம்! அண்ணனை விட்டுப் பிரிந்த பிறகு அவளுக்குத் தெரிந்த - ஆறுதல் அளிக்கக்கூடியவர் கள் வேறு யார் இருக்கிறார்கள்? ஆனால் திருமுருகு அங்கே இருந்தால்தானே! அவன்தான் குழந்தைகள் கப்பல் ஏறிவிட்டார்கள் என்கிற நிம்மதியில் வீடு சென்றுவிட்டானே! அத்தனை நேரம் அங்கே நடந்த எல்லாவற்றை யும் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பிரமுகர் சாந்தி யின் விஷயமாக மேலதிகாரியை அணுகினார். அவர் பெயர் கருணாகரன். நகரத்திலும், பர்மா அரசாங் கத்திடமும் செல்வாக்கு உடையவர். குழந்தையைத் தாம் தம்முடன் அடுத்த கப்பலில் அழைத்துச் சென்று உரியவர்களிடம் ஒப்படைப்பதாகக் கூறி бӦТПГП = உடனேயே சுங்க அதிகாரியும், சரி...சரி... , என்று பலமாகத் தலையை ஆட்டித் தன் சம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/46&oldid=791280" இலிருந்து மீள்விக்கப்பட்டது