பக்கம்:காப்டன் குமார்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. 47 யதும் அந்த அழகிய பங்களாவின் முன்னால் எழுதி யிருந்த கொட்டை எழுதுத்துக்களை, ஒவ்வொன் றாகக் கூட்டி வாசித்தாள்: சாந்தி விலாஸ்.’’ 'ஆ...ஆ...என்.பேரு...?? என்று கைகொட்டி ஆர்ப்பரித்தாள் சாந்தி. ஆமாம்...ஆமாம்...உன் பெயர்தான் எழுதி யிருக்கு. இது உன் வீடுதான். வா, உள்ளே போக லாம்?? என்று கற்பகம் அவளை உள்ளே தூக்கிச் சென்றாள். கீழே இறங்கிய சாந்தி வீடு முழுவதும் சுற்றி வந்து ஒரு நோட்டம் விட்டாள். அடேயப்பா..? எவ்வளவு பெரிய வீடு. அழகான விளக்குகள்... எவ்வளவு பெரிய நிலைக் கண்ணாடி...பூத்தொட்டி ஆ! இதையெல்லாம் குமார் பார்த்தால்...” அவ்வளவுதான். மறு நிமிஷம் சாந்தி வீல்’ என்று பெரிதாக அழுது விட்டாள். ஆம்! அவளுக்கு அண்ணாவினுடைய நினைவு வந்து விட்டதே! பாத்ரூமிற்குச் சென்றிருந்த கற்பகம்-மாடிக்கு உடைகளை மாற்றச் சென்றிருக்த கருணாகரன்தட்டில் பிஸ்கட்டுகளை எடுத்துக் கொண்டிருந்த வேலையாள் - மூலைக்கொருவராக ஓடி வந்து சாந்தியை சூழ்ந்து கொண்டனர். என்னம்மா சாந்தி! ஏன் இப்படித் திடீரென்று அழ ஆரம்பித்து விட்டாய்? நாங்கள் எல்லோரும் தான் இருக்கின்றோமே? என்று சமாதானம் செய்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/50&oldid=791290" இலிருந்து மீள்விக்கப்பட்டது