பக்கம்:காப்டன் குமார்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 'குழந்தைக்கு இடம் புதுசு, நமக்குக் குழந்தை புதிசு; அவர்களுக்கு இது எல்லாமே புதிசுதானே... எல்லாம் பழக்கத்தில் சரியாகி விடும்?? என்று கூறிக் கொண்டே வந்தவர், அதோபார் சாந்தி சிரிக்கி றாள், நம்முடைய சண்டையைப் பார்த்து விட்டு?? என்றார். ‘'என் சமத்து வெல்லக்கட்டி - கரும்புக்கட்டி’ என்று பெண்ணை வாரி எடுத்துக் கொண்ட கற்பகம் எதிரிலிருந்த பிஸ்கட்டுகளை எடுத்து, சாந்தியின் வாயில் ஊட்டினாள். சாந்தியும் தட்டிலிருந்த ஒரு பிஸ்கட்டை எடுத்துக் கற்பகம் வாயில் ஊட்டினாள்.

  • அப்பாவுக்கும் ஒண்னு கொடு?’ என்று தம் மனைவி சிபாரிசு செய்வதைக் கண்டதும் கருணா கரன் திடுக்கிட்டுப் போனார். -

'அப்...பா. அப்பா...? - அவரது வாய் முனு. முணுத்தது. மனைவியின் ஆசையும் துணிச்சலும் அவரை வியப்பில் ஆழ்த்தின. * 'ஊ...ங்...ஆக்காட்டு’’ என்று காதின் கீழ் வந்து கத்திய சாந்தியின் குரலைக் கேட்டு, கருணா கரன் சட்டென்று திரும்பினார். சாந்தி கையில் பிஸ்கட்டை மறைத்துக் கொண்டு, சிரித்த வண்ணம் நின்று கொண்டிருந்தாள். அன்று அவருக்கு அது பிஸ்கட்டாகவா சுவைத்தது? அமிழ்தமாக அல்லவா இனித்தது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/52&oldid=791295" இலிருந்து மீள்விக்கப்பட்டது