பக்கம்:காப்டன் குமார்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 உலகத்தில் எல்லாமே இப்படி எதிர்பாராமல்தான் கிடைக்குமோ? அன்று இரவு முழுவதும் கருணாகரன் தூங்கவே இல்லை. பர்மாவின் தயவை நாடிவந்த ஆயிரக் கணக்கான இந்தியர்களில் அவரும் ஒருவர். ஆகவே எல்லோரையும் போலவே அவரும் கப்பல் ஏற வேண்டியவர்தான். ஆனால் கருணாகரன் கெட்டிக்காரர். பர்மாக் காரர்களை நம்பி அவர் ஏமாந்துவிடவில்லை. தடை கள் இல்லாத காலத்திலேயே விழித்துக் கொண்டவர். தாம் சம்பாதிப்பதில் ஒரு பகுதியை அவ்வப்போது ஊருக்கு அனுப்பிவிடுவார். பிறந்த இடத்திலே பொருளையும்-பிழைக்கிற இடத்திலே செல்வாக்கை யும் சேமித்துக்கொண்ட சமர்த்தர். அவர் வரைக்கும் ஏமாற்றம் இல்லை. ஆனால் ஏமாற்றப்பட்டவர்களுக் காகத் துக்கப்பட்டார். ஏமாந்தவர்களுக்காக அவரது உள்ளம் அழுதது. ஒருவேளை அந்த அழுகையின் எதிரொலி தானோ வீடு முழுவதும் அதிருவதுபோல் கேட்டுக் கொண்டிருக்கிறது? -- 'இந்தாருங்கள் - சீக்கிரமாகக் கீழே இறங்கி வாருங்களேன்?’ என்ற மனைவியின் அவசர அழைப்பைக் கேட்டுக் கருணாகரன் வாரிச் சுருட்டிக் கொண்டு ஓடோடியும் வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/53&oldid=791298" இலிருந்து மீள்விக்கப்பட்டது