பக்கம்:காப்டன் குமார்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 'என்ன கற்பகம், இப்படி எதிர்க் கேள்வி போட்டுக் கொண்டேயிருக்கிறாய்? அண்ணன் கையில் ஒப்பிக்காமல்...இந்தப் பெண்ணுக்குத்தான் அப்பா அம்மாவையே சொல்லத் தெரியவில்லை. பட்டணத்திலே இருக்கிற சொந்தக்காரர்களையா நமக்குக் காட்டப் போகிறாள்? என்றார். 'சரி...சரி...குழைந்தையைப்போய் ஏன் குற்றம் சொல்லுகிறீர்கள்? பெரியவர்களுக்கே தெரிவ தில்லை??? * - கற்பகம்மாள் வார்த்தையை முடிக்கவில்லை கருணாகரன் வியப்போடு மனைவியின் முகத்தைப் பார்த்தார். அதற்குள் இவ்வளவு பாசமும் பரிவும் அவள் உள்ளத்திலே பெருகி வளர்ந்து விட்டதா? என்பதுதான் அந்தப் பார்வையின் பொருள். அவர் வாயே திறக்கவில்லை. மறுகணம், 'அம்மா!’’ என்று அழைத்தபடியே படுக்கையிலிருந்து எழுந்த சாந்தி, கற்பகம்மாளின் கழுத்தைக் கட்டிக் கொண்டதைக் கண்டதும், கருணாகரன் மானசிகமாகக் கன்னத்தில் போட்டுக் கொண்டார். பாசத்தின் வெற்றி அவரைத் தலை குனியவைத்தது. 'அம்மா!’’ என்ற குழந்தையின் அந்த ஒரு சொல்லில் கற்பகம்மாளின் உள்ளமெல்லாம் குளிர்ந்து விட்டது. பகலெல்லாம் தான் உபதேசம் செய்த, *அம்மா போதனை பயனற்றுப் போகவில்லை என அவள் உள்ளம் அகமகிழ்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/56&oldid=791304" இலிருந்து மீள்விக்கப்பட்டது