பக்கம்:காப்டன் குமார்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தெரியும், தெரியும்...சாந்தி உன் அண்ணாவை நாம் நன்றாகப் பார்க்கலாம்; கூப்பிட்டுப் பேசலாம். இந்த அப்பா சுத்த அசடு; ஒன்றும் தெரியாது’’ என் றாள். சாந்தி சிரித்தாள். - ■ குழந்தையிடம் எப்படிப் பேசவேண்டும் என் பதுதான் தெரிகிறதா?’ என்று குறும்பாகப் பார்த்து ஏளனமாகச் சிரித்தாள் கற்பகம்மாள். 6 நீதான் இருக்கிறாயே, பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்ந்தவள்!’’ பெறாவிட்டால் ... ஒன்...?? - கற்பகம்மாள் வார்த்தைகளை முடிக்கவில்லை. துக்கம் பீரிட்டுக் கொண்டு வந்துவிட்டது. கேசரி...சரி, ஏதோ வாய்தவறி வந்துவிட்டது. போகட்டும். குழந்தை இப்போதுதான் நிறுத்தியிருக் கிறாள்; நீ ஆரம்பித்து விடாதே’ என்று கூறிய வண்ணம் மாடிக்குச் சென்றுவிட்டார் கருணாகரன். அன்று அவருக்குத் தூக்கமே வரவில்லை, வேடிக்கையாகத்தான், தம் மனைவியிடம் அவர் அப் படிக் கூறினார். ஆனாலும், குத்திச் காட்டுவது போல் அந்த வார்த்தைகள் அவள் மனத்தை எவ் வளவு புண்படுத்தியிருக்கும் என்று அவரால் எண் னிப் பார்க்க முடிந்தது. அதற்கு மேலும் தனியாக மாடியில் அவருக்கு இருப்புக் கொள்ளவில்லை. கீழே வந்து எல்லோருடனும் சேர்ந்து படுத்துக்கொண்டு விட்டார். --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/59&oldid=791310" இலிருந்து மீள்விக்கப்பட்டது