பக்கம்:காப்டன் குமார்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உங்களுடன் ஒரு நிமிஷம்!

ன்பார்ந்த குழந்தைகளே; வணக்கம்! இந்தக் கதையை நீங்கள் படிக்கத் துவங்கு முன் உங்களுடன் ஒரு நிமிஷம் பேச விரும்புகிறேன்:

சென்னையிலுள்ள ராஜாஜி கடற்கரைச் சாலையை நீங்கள் அறிவீர்கள். இதற்கு, 'முதல் லைன் பீச்' என்பது முன்னையப் பெயர்.

பாரிமுனையிலிருந்து துவங்கி, கடற்கரை ஸ்டேஷன் வரை, அடர்ந்த மரங்களின் நிழலிலே ஒரமாக-வரிசையாக ரயில் வண்டித் தொடர் போல் நீண்டு கொண்டே செல்லும் பெட்டிக் கடைகளையும்; மக்கள் அந்த ஒவ்வொரு சிறிய கடையின் முன்பும் கூட்டம் கூட்டமாய் நின்று தங்களுக்கு வேண்டிய சாமான்களை வாங்கிச் செல்வதையும் பார்த் திருப்பீர்கள்

புதிதாக உருவான இந்த நீண்ட கடைத் தெருப் பகுதி, “பர்மா பஜார்” என்னும் பெயரைத் தாங்கி நிற்கிறது.

சென்னையில் இப்படியொரு புதிய “பர்மா பஜார்", தோன்றக் காரணமென்ன? இதற்கு ஏன் “பர்மா பஜார்" என்கிற பெயர் வந்தது. அப்படியானால்-இந்தக் கடை வைத்திருப்பவர்கள் எல்லாம் பர்மியர்களா என்றால்--

இல்லை--

இந்தக் கடைகளின் உரிமையாளர்களில் ஒருவர் கூட பர்மியர் இல்லை. அனைவரும் இந்தியர்களே! ஆனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/6&oldid=1117869" இலிருந்து மீள்விக்கப்பட்டது