பக்கம்:காப்டன் குமார்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 அப்போ... ஏன் என்னை நீ எழுப்பி அண்ணாவைக் காட்டல்லே? நான் உன்கூட டு... போ என்று கூறிய சாந்தி விருட்டென்று கற்பகம் மாளின் பிடியிலிருந்து திமிறிக் கருணாகரனிடம் வந்து நின்றாள். சட்டென்று குனிந்து சாந்தியைத் தூக்கிக் கொண்ட அவர், குழந்தையிடம் எப்படிப் பேச வேண்டும் என்பதுதான் தெரிகிறதா?’ என்று மனைவியைப் பார்த்துப் பதிலுக்குப் பரிகசித்தார். சாந்தியின் முகத்தைத் தம் பக்கம் திருப்பிய வண்ணம், இதோ பார்...இந்த அம்மாகூட நீ இனிமே பேசாதே. கப்பல் வந்ததும், நீ தூங்கினாக் கூட உன்னை எழுப்பி அண்ணாகிட்டே கூட்டிக் கொண்டு போறேன். எங்கே எனக்கு ஒரு முத்தம் கொடு? என்று கொஞ்சியபடி ஒரக் கண்ணால் மனைவியைப் பார்த்தார். கற்பகம்மாள் அங்கே இல்லை. ஆம், சாந்தியுடன் கொஞ்சிக் கொண்டிருந்தால் போதுமா? கொஞ்சம் போனால் வயிறு கெஞ்ச ஆரம்பித்துவிடுமே! உள்ளே துரிதமாகச் சமையல் வேலைகளில் ஈடுபட்டிருந்தாள் கற்பகம்மாள். நான்கு நாளும் நான்கு நிமிஷங்களாக ஒடிப் போய் விட்டன. பொழுது விடிந்தால் கப்பல் வந்து விடும். அதில் சாந்தியின் அண்ணனும் வருவான். பிறகு.?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/62&oldid=791318" இலிருந்து மீள்விக்கப்பட்டது