பக்கம்:காப்டன் குமார்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. பெரியவர் சொன்ன கதை يجيد

  • anu au

கப்பல் காப்டன் கூறியதைக் கேட்ட கருணா கரன் அப்படியே இடிந்து போனார். கப்பல் ஏறிய அன்று இரவுச் சாப்பாட்டுக்குக் குமார் வந்ததையும் தங்களுக்கெல்லாம் சாப்பாட்டின்போது மிகவும் உதவி செய்ததையும் காப்டன் வெகு உருக்கமாகக் கூறினார். இவ்வளவு நல்ல பையன், இப்படி அநியாயமாக அவசரப்பட்டு விட்டானே? என்று வருத்தப்பட்டார். ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால், ஒரு பகல் நேரப் பிரயாணத்திற்குள் சாந்தியின் அண்ணனை அன்று கப்பலில் வந்த அத்தனை பேரும் அறிந்து வைத்திருந்தனர். அந்தக் குறுகிய காலத்திற்குள்தான் அவன் எத்தனை பேருடைய உள்ளங்களைக் கவர்ந்து விட்டான்!” என்று கருணா கரன் வியந்தார். எல்லோரையும்விட குமாருடன் முதலில் பழக்கமான பெரியவர்தான் கருணாகர னைக் கண்டதும் அழுதே விட்டார். கப்பலிலிருந்து சாந்தியைப் பர்மாவில் இறக்கி விட்டது முதல், அன்று இரவு குமாரைத் தம் அருகில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/66&oldid=791327" இலிருந்து மீள்விக்கப்பட்டது