பக்கம்:காப்டன் குமார்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

இவர்களுக்கும பாமாவுக்கும் ஒரு காலத்தில் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. இவர்களுக்குப் பின்னணியில் நெஞ்சை உலுக்கும் உண்மையான ஒரு சோகக் கதை உண்டு.

'திரைகடல் ஒடியும் திரவியம் தேடு-என்னும் மூதுரைக்கேற்ப-பிழைப்பைத் தேடி-கடல் கடந்து பர்மாவிற்குச் சென்று-நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த அன்னிய மண் ளிைற்கு உழைத்து உழைத்து உருக் குலைந்தவர்கள்--

அன்னிய மண்ணைத் தாங்கள் பிறந்த மண்ணைப் போல் பாவித்து, நேசித்துவந்த இந்தியர்களை ஒரு நாளைய அன்னிய அரசாங்கத்தின் ஆணை-அடியோடு சூறையாடி விட்டது.

தங்கள் ஊக்கத்தாலும், விடா முயற்சியினாலும் உண்மையான உழைப்பினாலும் அவர்கள் ஈட்டிய செல்வத்தையும் கட்டிய வீடுகளையும் அன்னிய மண்ணிலேயே உதறிவிட்டு--

அடுத்த வேளைக்கு உண்ண உணவோ உடுக்க உடையோ இல்லாத ஆண்டிகளைப்போல-அகதிகளாக அவர்களையெல்லாம் பர்மிய அரசு கப்பலேற்றி இந்தியாவுக்கு விரட்டி அனுப்பி விட்டது.

இப்படி வந்தவர்களுக்கு, நமது அரசு மறுவாழ்வு கொடுத்து-அவர்கள் சொந்தத்தில் தொழில் செய்து வாழ வைக்க தேர்ந்தெடுத்த இடம்தான்-இன்று, பர்மா பஜாராக ஒளி வீசிக் கொண்டிருக்கிறது.

ந்த நாவலிலே வரும் குமார், பர்மாவில் பெரிய செல்வந்தர் வீட்டுப் பிள்ளையாகப் பிறந்தவன். துன்பத்தின் தூசிகூடப் படாமல்-செல்வமாய் வளர்த்து ஆளாக்கப் பட்டவன். திடீரென்று ஒரு நாள் அறிவித்த, பர்மிய அரசின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/7&oldid=1117870" இலிருந்து மீள்விக்கப்பட்டது