பக்கம்:காப்டன் குமார்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 அல்லவா உள்ளுற நடுங்கியவண்ணம் அவர் அவர், களை நோக்கி வந்துகொண்டிருந்தார்! 拳 馨 를 - அன்று அமாவாசை கழிந்த எட்டாம் நாள். பின் நிலவுக் காலம், கப்பலிருந்து லைஃப் பெல்டை மாட்டிக் கொண்டு குமார் கடலில் குதித்தான் அல்லவா? ஒருகணம் அவனுக்கு இந்த உலக நினைவே இல்லை. கரிய நிறக் கடலில், கும்மிருட் டில் குதிப்பதென்றால் அதற்கு எவ்வளவு மனோ தைரியம் இருந்திருக்க வேண்டும்? என்னதான் ரைப்பர் கச்சை இருந்தாலும் அது.ஒரு புதிய அநுபவம் தான் அல்லவா? - ஆனால் குமார் உயிரை லட்சியம் செய்யாமல் தான் இந்தக் காரியத்தில் இறங்கினான். கப்பலில் இருக்கிற எவர் கண்ணிலும் பட்டுவிடக் கூடாதே என்கிற ஒரே பயம் - சகோதரியை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்கிற ஒரே ஆவல் - இரண்டும் சேர்ந்து கடலைக் குளம் எனக் கருதி அவனைக் குதிக்கச் செய்தன. வட்டவடிவமான அந்த ரக்பர்க் குழாயின் மத்தி யிலே உடலையும், மேலே கைகளையும் போட்டு அணைத்தவண்ணம்; ஒர் அபூர்வ ஐந்துவைப்போல் குமார் கடலிலே மிதந்து கொண்டிருந்தான். சற்றுக் கை சோர்ந்து, பிடி நழுவினாலும், கடலின் அதலா பாதாளத்திற்குச் சென்றுவிடுவான். என்ன இருந் தாலும் குமார் சிறுவன் தானே! எத்தனை நேரம் தான் அந்தப் பயங்கரமான கடலில் அப்படி அயரா மல் அவனால் மிதக்க முடியும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/70&oldid=791338" இலிருந்து மீள்விக்கப்பட்டது