பக்கம்:காப்டன் குமார்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 விட்டுக் கப்பல் மேற்கு நோக்கி வெகுதூரம் சென்று விட்டது. கார்த்திகையின்போது ஆற்றிலே அகல் விளக்கேற்றி மிதக்கவிடுவார்களே; அது போல் தூரத்தே கரிய இருளில் கப்பல் விளக்குகள் தண்ணிரிலே மிதப்பதுபோல் இருந்தன! அந்த ஒளிக் கூட்டங்களையே பார்த்தபடி இருந் தான் குமார். இப்படிக் குதிக்காவிட்டால் அவனும் அந்தக் கப்பலில் அத்தனை தூரம் சென்றிப்பான் அல்லவா? நம்பிக்கை என்னும் ஒளியே மறைந்துவிட்டாற். போல் சட்டென்று ஒரு திருப்பத்தில் கப்பலின் விளக் குகள் திடீரென்று மறைந்துவிட்டன, ஆனால் அதே சமயத்தில் வானத்தில் நிலாப் பூத்தது. குமாரின் உள்ளத்திலும் நம்பிக்கை பொங்கி வழித் தி.து. வரவர நிலவின் ஒளி பெருகிக் கொண்டே வந் தது. சிறிது நேரத்திற்கெல்லாம் கருங்கடல் பாற். கடலாகக் காட்சியளித்தது. காற்றின் ப்ோக்குக்கு ஏற்பக் கைகளைத் துழாவியும், கால்களை உதைத் தும் கடலைக் கலக்கிக் கொண்டிருந்தான் குமார். கால்களிலே சிறிதும் பெரிதுமான மீன்கள் கொத்திக் கொத்திப் பார்த்துவிட்டுத் திரும்பியவண்ணம் இருந் தன. தூரத்திலே அவனைவிடப் பெரிய மின்கள் தண்ணிருக்கு மேலே நன்றாக எழும்பி எழும்பித் துள்ளிக் குதித்தபடி இருந்தன. இந்தக் காட்சிகளை எல்லாம் பார்த்து ரசிக்கும் நிலையிலா அப்போது இருந்தான்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/72&oldid=791342" இலிருந்து மீள்விக்கப்பட்டது