பக்கம்:காப்டன் குமார்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கள்ளத் தோணி - கீழ் வங்காளக் குடாக் கடலில், நடு நிசியில் ஒரு படகு கிழக்கு நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. வானத்து விளக்கைத் தவிர அந்தப் படகிலே வேறு விளக்கு இல்லை. லைஃப் பெல்டை மரணப் படுக்கையாக மதித்து அதன்மீது உயிரைவிடக் கண்களை மூடிய குமார் திரும்பக் கண்களை விழித்தபோதுத்தான் ஒரு பட கில் இருப்பதை உணர்ந்தான். இரண்டு கைகளாலும் துடுப்புகளைத் துழாவிய வண்ணம் படகிலே இருந்த படகோட்டி, குமாரைப் பார்த்து லேசாகச் சிரித் தான். ‘'என்ன பார்க்கிறே - எப்படிடா இங்கே வந்து படுத்துத்கிட்டோம்னா??? குமார் பதிலே சொல்லவில்லை. அவனுக்கு என்ன நடந்திருக்கும் என்பதுதான் புரிந்துவிட்டதே. ஆனால் எல்லாமே அவனுக்குக் கனவு மயக்கமாகத் தான் இருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/74&oldid=791346" இலிருந்து மீள்விக்கப்பட்டது