பக்கம்:காப்டன் குமார்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 எேன்ன ஆகியிருக்கும்? இப்போ நம்ம வயத்துக் குள்ளே போற மீனைப் போல ஒரு சுறாமீனுடைய வயித்துக்குள்ளே காப்டன் ஐயா போயிருப்பாரு’’ என்று கேலி செய்தவண்ணம் கையிலிருந்த தட்டைக் குமாரிடம் நீட்டினான். - துடுப்பைத் திரும் பவும் படகோட்டியிடம் கொடுத்து விட்டுத் தட்டை வாங்கிக்கொண்டான் குமார். அதில் தண்ணிர் விட்ட சோறும், ஏதோ ஒரு வியஞ்சனமும் இருந்தன. அந்த வாசனை, குமாரின் குடலைக் குமட்டியது. ஆயினும் அதை வெளிப்படை யாகச் சொல்லி படகோட்டியின் மனதை புண்படுத்த அவன் விரும்பவில்லை. ஐயா, நீங்கள் சாப்பிடவில்லையா??? நீ முதலில் சாப்பிடு தம்பி! கலயத்திலே எனக்குச் சோறு இருக்குது, கவலைப்படாதே!’’ இந்தாருங்கள். நான் அதை எடுத்துக்கொள் கிறேன். நாம் இரண்டு பேருமே சேர்ந்து சாப்பிடு வோம்?? என்றபடி தட்டை அவனிடம் நீட்டினான் குமார். கலயமே ஊளைவாடை அடித்தது. ஆனாலும் பசி வேகம்; குமார் தன்னையும் மீறி இரண்டு பிடி வாயில் போட்டுக்கொண்டான். படகோட்டி அப் போதுதான் கவனித்தான். என்ன தம்பி, வெறும் சோத்தைத் திங்கிறே? சைவமோ? வெங்காயம் வேணும்னாகொடுக்கவோ??? வேண்டாம் ஐயா...இதுவே போதும்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/77&oldid=791352" இலிருந்து மீள்விக்கப்பட்டது