பக்கம்:காப்டன் குமார்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. வலையில் விழுந்த மீன் கயங்கரமான அடியினால் மயக்கமுற்ற குமார் கண் விழிக்கச் சிறிது நேரம் ஆயிற்று. இப்படி ஒரு சம்பவம் நிகழும் என்று அவன் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. நினைத்திருந்தால், ஒரு வேளை அவன் இப்படித் துடுக்காகப் பதில் சொல்லாமல் இருந்திருப்பான். அடியின் எதிரொலி இன்னும் அவன் காதில், உய்ங்...” என்று ரீங்காரம் செய்து கொண்டே இருந்தது. H கண் விழித்துத் தலையைத் துாக்கியதும் இன்னும் எத்தனை அடி விழப்போகிறதோ-அல்லது அந்த மன்னாடி மேலும் என்ன செய்யப் போறோனோ என்றுதான் குமார் முதலில் நினைத் தான். ஆனால் அப்படி ஒன்றும் நேரவில்லை. மாறாக, மன்னாடிதான் கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு விக்கி விக்கி அழுதான். குமாருக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. பிறகு புரிந்தது. தன்னை ஆத்திரத்தில் அடித்து விட்டதற்காகத்தான் அவன் வருந்தி அழுகிறான் என்று. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/83&oldid=791364" இலிருந்து மீள்விக்கப்பட்டது