பக்கம்:காப்டன் குமார்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 அதற்கு உடனே வெளிமணம், 'உன்னைக் கடலி லிருந்து காப்பாற்றி உயிர்க் கொடுத்த மன்னாடிக்காக நீ இதுகூடச் செய்யக் கூடாதா? சமுத்திரத்தைக் குட்டை மாதிரி எண்ணிக் குதித்து விட்டவனே; நீ அதில் செத்துப் போயிருந்தால் அப்போது உன் தங்கையை யார் காப்பாற்றுவார்கள்? அல்லது இத்தனை நாளாக நீதான் அவளைக் காப்பாற்றி னாயா? அழ, அழ அவளைக் கரையிலே விட்டுவிட்டு நீ கப்பலில் புறப்பட்டு விடவில்லை? குதிக்கிறவன் அப்போதேயல்லவா, தங்கையில்லாமல்! போக மாட்டேன்?’ என்று குதித்திருக்க வேண்டும். ஏதோ நீ பட்டகடனுக்கு அவனுக்கு சிறிது உழைப்பதால் ஒன்றும் தேய்ந்து போகமாட்டாய். அதற்குள் உன் தங்கை பர்மாவில் இருக்கிறாளா இல்லையா என்ப தையும் அறிந்து கொண்டு விடலாம்! என்று. உபதேசம் செய்தது. குமாருக்கும் அதுவேதான் சரியான யோசனை யாகப் பட்டது. ஆனால் பர்மாவில் சாந்தியைக் கண்டுபிடித்து விடுவது மட்டும் அத்தனை சுலபமா என்ன? அல்லது அன்று சாந்தியை இறக்கி விட்ட அதே சுங்க அதிகாரியிடம் சென்று, எங்கே என் தங்கை??’ என்று தப்பி வந்த அவனால் கேட்க முடியுமா? சட்டென்று மின்னல் வேகத்தில் அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அது வேறு ஒன்றுமில்லை. வேலைக்காரன் திருமுருகுவைச் சந்தித்து எல்லா ___

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/89&oldid=791376" இலிருந்து மீள்விக்கப்பட்டது