பக்கம்:காப்டன் குமார்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 ஒர் ஒதுப்புறமான இடத்தில் ஏஜெண்ட் கையி லிருந்த பொட்டலத்தைப் பிரித்தார்! சுவானின் வீட்டிற்குள் நுழைந்த கற்றை நோட்டுக்கள், வைரக் கற்களாகவும், தங்கபஸ்பமாகவும் உருமாறிக் காட்சியளித்தன. அதையெல்லாம் அவரிடமிருந்து பத்திரமாக வாங்கி இடுப்பில் செருகிக்கொண்டான் குமார். மாலையில் குடிசையில் சந்திப்பதாக மன்னாடி யிடம் சொல்லு?’ என்று ஏஜெண்ட் விடை பெற்றுக் கொண்டார். இருவரும் ஒரு சந்திப்பில் பிரிந்தனர். வழிநெடுகத் திருமுருகுவின் நினைவு அவனைக் குடைந்து கொண்டேயிருந்தது. ஆனால் அப்போது திருமுருகுவின் வீட்டிற்குப் போகக் குமாருக்குத் தைரியம் வரவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது அவனது மடியில் உயிருக்கு ஆபத்தான பொருட்கள் இருக்கின்றன; அவை மன்னாடிக்குச் சொந்தமானவை. அவைகளை பத் திரமாக மன்னாடி கையில் சேர்த்தாக வேண்டும். மற்றொன்று, அவன் அன்று குடிசையிலிருந்து புறப் பட்டுத் தனது காரியங்களை வழக்கப்படிச் சுறுசுறுப் பாகச் செய்யவில்லை. ஏனோ அவனது கால்கள் பையா வை நோக்கி இழுத்தன. சுவேடகோன் பையா’வில் பாதிப் பொழுதைக் கழித்துவிட்டான். திட்டப்படி அவன் எப்போதோ குடிசைக்குத் திரும்பி யிருக்க வேண்டும். + - இத்தனை நேரம் மன்னாடி என்னைப்பற்றிக் கவலைப்படுவதை விட அதிகமாகச் சந்தேகம்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/96&oldid=791385" இலிருந்து மீள்விக்கப்பட்டது