பக்கம்:காப்டன் குமார்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 தான் அரைக்கணம் இருந்தாலும் தொலைந்தோம்? என்கிற கிலி மன்னாடியைப் பிடித்துக் கொண்டு விட்டது. ஆம் சட்டையைத் தட்டுகிற போலீஸ்காரன், இடுப்பைத் துழாவ எத்தனை நேரம் பிடிக்கும்? பொருள்கள் அவன் கையில சிக்கிக் குமாரும் தன் பெயாைச் சொல்லிவிட்டால் பிறகு கேட்கவேண்டுமா? மன்னாடி சிட்டாய்ப் பறந்துவிட்டான் குடிசையை நோக்கி. எந்த நிமிஷம் போலீஸ் ஜீப் குமாரையும் ஏற்றிக் கொண்டு தன்னுடைய இருப்பிடத்தைத் தேடி வரப்போகிறதோ என்று அவன் இதயம் அடித் துக் கொண்டது. ஆனால் அப்படி நேர்ந்தால் குமாரைச் சொல்ல குற்றமென்ன இருக்கிறது? போலி சிடம் மாட்டிக்கொண்ட பரம்பரைக் கேடி கூட ஸ்டேஷனுக்குள் சென்று இரண்டு லத்தி வாங்கி னால் இல்லாததை யெல்லாம்கூடக் கக்குவானே! பாவம், பையன் குமார் எம்மாத்திரம்? - மன்ன ாடி அசுரவேகத்தில் குடிசையிலுள்ள அபாய கரமான அல்லது சந்தேகம் ஏற்படும்படியான சாமான்கள் அத்தனையையும் எட்ட ஒர் இடத்தில் குழிதோண்டிப் புதைத்தான். கிழிந்த வலை யொன்றையும், ஊசிநூலையும் குடிசையின் வாயிற் படியில் போட்டுவைத்தான். சற்று எட்ட இருந்த ஒரு மரத்தில் ஏறி உட்கார்ந்துகொண்டான்-எந்த நிமிஷம், எந்தத் திசையிலிருந்து குமார் ஜீப்பிலேறி வரப்போகிறானோ-என்று நாலாபக்கமும் பார்த்துக் கொண்டேயிருந்தான் மன்னாடி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/99&oldid=791388" இலிருந்து மீள்விக்கப்பட்டது