பக்கம்:காரும் தேரும்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 காரும் தேரும்

ஊடுருவி நிற்கின்றது. அவ்வுட்கோளே மனித வாழ்க்கை யினைச் செம்மைப்படுத்த வேண்டும் என்னும் சீரிய நோக்கமாகும். வைகவுண்ட் மார்லே என்ற மேனாட்டு ஆசிரியர், மக்களுக்கு நல்லொழுக்கம் புகட்டுவதில் இலக்கியம் ஒரு சிறந்த கருவியாக உளது: என்று குறிப்பிட்டுள்ளமை ஈண்டு நோக்கத்தக்கது. கவிஞரும்

திறனாய்வாளருமான மாத்யூ அர்னால்டு மனிதப் பண்பாட்டிற்கு மாறான கவிதை-மனிதப் பண்பாட்டிற்கு Lorra; விளைவிக்கும் கவிதை-வாழ்க்கைக்கு எதிராகச்

செய்யப்படும் புரட்சி என்பர். சிறந்த கருத்துகளைக் கொண்டிராத எந்தக் கவிஞனும் மிகப்பெரிய கவிஞனாகக் கருதப்படமாட்டான் என்றும் கூறுவர். மேலும் கவிஞர்கள் தங்கள் கவிதைகளைப் படிப்பவர் மனத்தில் விளைவிக்கும் -உருவாக்கும் மனப் பண்பாட்டினைக் கொண்டே, மதிப்பிடப் பெறுவர்” என்ற கூற்று முற்றிலும் உண்மையே யன்றோ! ஒப்பற்ற தத்துவஞானியாக இல்லாத ஒருவன் சிறந்த கவிஞனாக விளங்க முடியாது என்பர் கவிஞர் கோல்ரிட்ஜ்.

1. Literature is one of the most powerful instruments for forming character. —Viscount Morley

2. A poetry of revolt against moral loeas is a poetry of revolt against life; a poetry of indifference towards

moral ideas is a poetry of indifference towards life.

—Matthew Arnold.

3. The great poets are judged by the frame of mind they induce. —Emerson, Preface to Parnasus.

4. No man was ever yet a great poet without being

at the same time a profound philosopher.

- —Coleridge

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/10&oldid=587064" இலிருந்து மீள்விக்கப்பட்டது