பக்கம்:காரும் தேரும்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 காரும் தேரும்

குறிப்பிட்டுள்ளதினின்றும் அறியலாம். அத்தகு பழமையும் பெருமையும் வாய்ந்த தொல்காப்பியத்திலே நாம் தமிழ்ச் செய்யுட்களின் இலக்கணம் கூறும் செய்யுளியலினைப்பொரு ளதிகாரத்தில் காண்கிறோம். இத்தகைய பழைய யாப்பு முறைபிற இலக்கணங்களில் அமைந்து கிடப்பது அருமை.

o தொல்காப்பியனார் தமிழ்ச்செய்யுள் வகையினை ஏழு

வகையாகப் பாகுபடுத்திப் பேசுகின்றார்.

பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே அங்கதம் முதுசொலோ டவ்வேழ் கிலத்தும் மண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெய ரெல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழிய தென்மனார் புலவர்.

-தொல்காப்பியம் செய்யுளியல் :79,

  • =

இதிலிருந்து பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி அங்கதம், முதுசொல் ஆகிய ஏழும் தமிழ்ச் செய்யுளின் வகைகள் என்பது புலனாகின்றது. ஆயினும் முதல் மூன்றே இவற்றுள் தலைமை சான்றவைகளாய் வழங்குகின்றன.

பாட்டினைத் தனிநிலைச் செய்யுள், தொடர்நிலைச் செய்யுள், நாடகச்செய்யுள் என மூவகையாக உரையாசிரி யர்கள் பகுப்பர். தொடர் நிலைச்செய்யுள் எனப்படுவதே காப்பியங்களாகும். ஆங்கிலத்தில் இதனை Epic என வழங்குவர். தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்திலே குறிப்பாக மெய்ப்பாட்டியல். உவமவியல், செய்யுளியல், மரபியல் ஆகிய நான்கு இயல்களில் காப்பிய இலக்கணத் தின் வரையறை ஒரளவு நமக்குத் தெரிவிக்கப்பெறுகின்றது. காப்பியத்திற்குரிய சுவைகளை மெய்ப்பாட்டியலிலும், அலங்காரம் எனப்படும் அணிகளை உவமவியலிலும் காப்பிய வகை, நடைகுறித்த செய்திகளை வனப்பு வண்ணங்களைப் பற்றிப் பேசும செய்யுளியலிலும் நாம்

-*

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/100&oldid=587063" இலிருந்து மீள்விக்கப்பட்டது