பக்கம்:காரும் தேரும்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத்தில் தமிழ்நாடு 99

அறிந்துணர முடிகின்றது, இன்ன பொருளை இன்ன சொல்லால் முந்தையோர் மரபு கண்டு கூறவேண்டும் என்று பழைய மரபிற்கு அரண் அமைக்கும் மரபியலும் காப்பிய மரபிற்கு ஓரளவிற்குத் துணை செய்வதே யாகும்.

தமிழில் செய்யுள் இலக்கணத்தை உணர்த்தும் தமிழ் நூல்கள் மிகப்பல என அறிகிறோம். தொல்காப்பியம், மாபுராணம், பூதபுராணம், அவிநயம், பல்காப்பியம், பல்காயம், காக்கை பாடினியம், சிறுகாக்கை பாடினியம், சங்க யாப்பு, கையனார் யாப்பு. நத்தத்தர் யாப்பு. மயே ச், சுரர் யாப்பு, முதலியன யாப்பினை விளக்க எழுந்த நூல் களாகும். பிற்காலத்னே யாப்பருங்கலக்காரிகை, வீரசோழி யம்,தமிழ்நெறி விளக்கம், இலக்கண விளக்கம், தொன்னுால், முத்து வீரியம் முதலியன யாப்பிற்கு இலக்கணம் வகுத்த நூல்களாகும்.

காப்பியம் என்பது காவ்யம் என்னும் வடசொல்லின் திரிசொல்லாகும். கவியாற் செய்யப்படுவது எதுவோ அது காப்பியம் என வழங்கும். பொதுவகையான் செய்யுட்கள் அனைத்தும் காவியமென்று கூறத்தக்கனவாயினும், தமிழ் மொழியின் வழக்காற்றில் பொருட்டொடர் நிலைக்கே அப் பெயர் வழங்குகின்றது. கவிஞர்கள் இயற்றும் பாடல்கள் அனைத்தும் சிறப்புக்குரியவைதான் என்றாலும், அவற்றுள் மாப்பியங்கள் தனிச்சிறப்புப் பெறுகின்றன. இதனைத் தண்டியலங்கார உரையாசிரியர் கவியாற் டாடப்படுவன யெல்லாம் காப்பியமல்லவோ, பொருட்டொடர் நிலை யைக் காப்பியமென்றது என்னையெனின், சேற்றுள் தோன் றுவன யெல்லாம் பங்கயமெனப் பெயர் பெறுமாயினும், அப்பெயர் தாமரை ஒன்றன்மேற்றே யாயினவாறுபோல இப்பெயர் பொருட்டொடர் நிலைக்கே ஆயிற்று’ என்பர். மனைவியின் உரைக்கு ஒப்பாகக் காவியத்தைக் கூறுதல் வட மொழியாளர் மரபு மொழியின் சிறப்பினையும் அணிகலத் தினையும் புலப்படுத்துவது ஒரு மொழியில் அமைகின்ற

==

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/101&oldid=587061" இலிருந்து மீள்விக்கப்பட்டது