பக்கம்:காரும் தேரும்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 காரும் தேரும்

காவியங்களேயாகும். வனப்பினைப் பற்றி விளக்கவந்த இடத்தில் தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியர் பின் வருமாறு கூறுகின்றார். பல செய்யுளும் உறுப்பாய்த் திரண்டு பெருகிய தொடர் நிலையதே வனப்பென்னும் பெயர்ப் பகுதி வகையான் ஏற்பதென்பது?’ என்கிறார். இதிலிருந்து ஒரு மொழியின் வனப்புகள் அனைத்தினையும் புலப்படுத்துவது அம்மொழியில் அமைந்த தொடர்நிலைச் செய்யுட்களால் ஆகிய காப்பியங்களே ஆகும் என்பது புல

னாகின்றது.

காப்பியம் என்ற சொல் பொருட்டொடர் நிலைச் செய்யுள், கதைச் செய்யுள், அகலக்கவி, தொடர்நிலைச் செய்யுள், விருத்திச் செய்யுள் எனப் பலபடியாக வழங்கப்

பெறும்.

பொருள் தொடர்ந்து வந்து பல அடிகளாலேனும், பல செய்யுட்களாலேனும் அமைந்து விளங்குவது பொருட் டொடர் நிலையாகும். இப் பொருட்டொடர் நிலையினை மூவகையாகக் காண்பர். முதலாவது பொருள் மட்டும் தொடர்ந்து வந்து கதை தழுவாது வரும் தொடர்நிலைச் செய்யுளாகும். இப்பிரிவில் பத்துப்பாட்டும், பொருள் பொதிந்த பிரபந்தங்களும் அடங்கும். இரண்டாவது பிரிவு தொடர்ந்து கதை தழுவிவந்து, அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கு உறுதிப் பொருள்களில் சிலவற்றையே கூறுவது. இவ்வகையில் மணிமேகலை, நீலகேசி, பெரிய புராணம், கந்தபுராணம் முதலியன அடங்ரும், மூன்றா லது பிரிவு, பொருள் தொடர்ந்து கதை தழுவி மேற்கூறிய நாற்பொருளையும் விளங்கச் செய்வது. பெருங்காப்பியங் களும், நாடகங்களும் இவ்வகையில் அடங்குவனவாகும்.

தொல்காப்பியனார் செய்யுளியளில் அம்மை, அழகு, தொன்மை: தோல்: விருந்து, இயைபு, புலன், இழைபு என எண்வகை வனப்புகளைச் செய்யுளின் உறுப்புகளாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/102&oldid=587060" இலிருந்து மீள்விக்கப்பட்டது