பக்கம்:காரும் தேரும்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

---

இலக்கியத்தில் தமிழ்நாடு Q101

கூறியுள்ளார். தண்டியலங்கார ஆசிரியர் பெருங்காப்பியத் தின் இலக்கணமாகப் பின்வருமாறு கூறியுள்ளார்.

பெருங்காப் பியநிலை பேசுங் காலை - வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றின் ஒன்று. ஏற்புடைத் தாக முன்தர வியன்று . . . நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகித் தன்னிக ரில்லாத் தலைவனை யுடைத்தாய் மலைகடல் நாடு வளநகர் பருவம் இருசுடர்த் தோற்றமென் றினையன புனைந்து நன்மணம் புணர்த்தல் பொன்முடி கவித்தல் பூம்பொழில் நுகர்தல் புனல்விளை யாடல் தேம்பிழி மதுக்களி சிறுவரைப் பெறுதல் புலவியிற் புலத்தல் கலவியிற் களித்தலென் றின்னன புனைந்த நன்னடைத் தாகி மந்திரங் தூது செலவிகல் வென்றி சந்தியிற் றொடர்ந்து சருக்கம் இலம்பகம் பரிச்சேதம் என்னும் பான்மையின் விளங்கி நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக் கற்றோர் புனையும் பெற்றிய தென்ப

. -

எனக் குறிப்பிட்டுள்ளார்.

வின்செஸ்டர் (Winchester) என்ற மேலை நாட்டு அறிஞர் விழுமிய உணர்ச்சி (Emotion), sabeo. கற்பனை susrli (imagination), su ışarıb (Form), a-siroft-rr6u கருத்து (content) ஆகிய நான்குமே கவிதை சிறக்க அமைய வேண்டிய சிறந்த நான்கு பொருள்கள் என்பர். வடிவம் எனப்படுவது செய்யுள் யாப்பு ஆகும். பாட்டில் ஒரு மூக மாக இயையும் முழுமை ஆகும். இலக்கியக் கலைக்கு வடிவம் இன்றியமையாதது. கவிஞர் தாம் உணர்ந்து அனுபவித்த உணர்ச்சிகளைப் பிறர் உள்ளத்திற் பதியச் செய்யக் கலையின் இந்த வடிவமே, பயன்படுகின்றது.

дът-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/103&oldid=587059" இலிருந்து மீள்விக்கப்பட்டது