பக்கம்:காரும் தேரும்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 காரும் தேரும்

பாட்டில் உணர்த்தப்படும் பொருளும், அப்பொருளைப் புலப்படுத்தப் பயன்படும் வடிவமும் பிரிக்க முடியாதன. கற்பனையுணர்ச்சியும் ஒலிநயமாகிய அதன் வடிவமும் ஒன்றுபட்டு இயைவதே நல்ல பாட்டாக மணம் கமழும்: பாட்டின் ஒலிநயம் முதலில் செவிகளுக்கு விருந்துாட்டி உட் சென்று உடலின் நரம்புகளை இயக்கும் ஆற்றல் பெற்றது.

  • தொல்காப்பியனார் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா.

வஞ்சிப்பா ஆகிய நான்கு பாக்களைச் சிறப்பாகக் குறிக் கின்றார்; உணர்ச்சிமிக்க காதல் பாட்டுகள் கலிப்பா வாகவும், பரிபாட்டாகவும் அமைதல் வேண்டும் என்கிறார். ஏனெனில் இப்பாக்களின் ஒலிநயம் மிக்க இன்பம் பயப்ப தாகும், ஒசையின் நயத்தை வண்ணம் என்ற பெயரால் குறிப்பிட்டு, இருபது வண்ணங்களாகத் தொல்காப்பியனார் பாகுபாடு செய்துள்ளார். ஒலிகள் அளவாலும் தன்மையா லும் முயற்சியாலும் வேறுபட்டு ஒழுங்காக அமைந்து வந்த அமைப்பே திரும்பத் திரும்ப வந்து இனிமை பயப்பது ஒலி நயம் எனக் கண்டோம். இயற்கையான இந்த ஒலிநயத்தை வளர்த்து வாய்பாடுகளாக்கி ஒருவகைச் செயற்கை அமைப்பைத் தந்தனர் முன்னோர், அதற்கு யாப்பு (Metre) எனப் பெயர் தந்தனர். இந்த யாப்பின்படி வெண்பா செப்பலோசையும், அகவற்பா அகவலோசையும், கலிப்பா துள்ளலோசையும், வஞ்சிப்பா துரங்கலோசையும் கொண்டு வரும். பிற்காலத்திலேதான் தாழிசை துறை விருத்தம் என்ற பாவினங்கள் தோன்றின.

காப்பியங்களுக்கு உரிய யாப்பினைப்பற்றித் தண்டிய யலங்காரத்தில் ஒரு நூற்பா வருகிறது.

அவை தாம்,

ஒருதிறப் பாட்டினும் பலதிறப் பாட்டினும் உரையும் பாடையும் விரவியும் வருமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/104&oldid=587057" இலிருந்து மீள்விக்கப்பட்டது