பக்கம்:காரும் தேரும்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் காப்பியங்கள் 1 O3

என்பதாகும். இதன் பொருளாவது பெருங்காப்பியமும் காப்பியமும் ஒருவகைச் செய்யுளானும், பலவகைச் செய்யுளானும், உரை விரவியும் பாடை விரவியும் வரும்’ என்பதாம். இவ்வகையில் ஒருதிறப்பட்டான் அமைந்த காப்பியங்கள் மணிமேகலை, பெருங்கதை என்பனவாம். இவை ஆசிரியப்பா யாப்பில் அமைந்துள்ளன. பலதிறப் பாட்டான்-அதாவது பல வேறுவகை யாப்பமைப்பில் வந்தவை சீவக சிந்தாமணி, சூளாமணி, கம்ப ராமாயண்ம் முதலியனவாம். உரையும் பாடையும் கலந்து வந்தது சிலப்பதிகாரமாகும்.

சங்ககாலத்தை அடுத்து ஆசிரியப்பாவே பெருவழக் காகக் காப்பியங்களில் பயிலப்பட்டது. ஒலிநயம் குறைந் தது ஆசிரியப்பாவாகும். இதன் ஆடரங்கம் எல்லைக்குட் பட்டது. ஆனால் விருத்தப்பா ஒலிநயம் மிக்கது. தொடர் நிலைச் செய்யுட்களைச் -- சேர்ந்த பிற்காலப் புராணங்கள் பெரும்பாலும் விருத்த யாப்பிலேயே அம்ைந்துள்ளன. எனவேதான் விருத்தப்பாவிற்கு” இலக்கண்ம் கூறவந்த யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் :புராணம்’ (LD:5 லாகிய விருத்தம்’ உரைத்தலானும் விருத்தமென்பது உம் காரணக்குறி’ என்றார். 1. *. * : *****,

வீரசோழிய உரையாசிரியர் கோவைக் கவித்துறை என்றும், காப்பியக் கலித்துறை என்றும் இருவகைப் பிரி வினைக் குறிப்பிடுகின்றார். கோவைக் கலித்துறை ான்பது கோவை நூல்களில் அமைந்துள்ள கட்டளைக் கலித்துறையாகும். காவியக் கலித்துறை என்பது கலித் துறைச் செய்யுட்களாகும். ,

தமிழில் ஐம்பெருங் காப்பியங்கள் என்று சீவக பிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐந்து நூல்களும், ஐஞ்சிறு காப் பியங்கள் என்று. உதயணகுமார, காவியம், நாககுமார

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/105&oldid=587056" இலிருந்து மீள்விக்கப்பட்டது