பக்கம்:காரும் தேரும்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O6 - காரும் தேரும்

வெவ்வாய் ஓரி முழவாக - :

விளிந்தார் ஈமம்விளக்காக ஒவ்வாச் சுடுகாட் டுயரரங்கின்

நிழல்போல் நுடங்கிப் பேயாட எவ்வாய் மருங்கும் இருந்திரங்கிக் .. கூகை குழறிப் பாராட்ட

இவ்வாறாகிப் பிறப்பதோ

இதுவோமன்னர்க் கியல்வேந்தே.

---

-சிந்தாமணி: நாமகள் :279.

ஏமாங்கத நாட்டினை ஆசிரியர் வருணிக்கும் பொழுது விருத்தம் அவரைக் கைகொடுத்துத் துாக்கி விடுகிறது. -

காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகி னெற்றிப் - - - - -

பூமாண்ட தீங்தேன் தொடைகீறி வருக்கை போழ்ந்து

தேமாங் கனிசிதறி வாழைப் பழங்கள் சிந்தும்

ஏமாங் கதமென் றிசையாற் றிசைபோய துண்டே.

-சிந்தாமணி: நாமகள் : 2

வளையாபதி எனும் நூல் நமக்கு முற்றும் கிடைக்க வில்லை. உரையாசிரியர்கள் உரையில் காணப்படும் பாடல் களும், புறத்திரட்டில் சேர்க்கப்பட்டுள்ள அறுபத்தாறு பாடல்களும் தவிரப் பிற பாடல்கள் கிடைக்கவில்லை. மக்கட்பேற்றின் மாண்பைப் புலப்படுத்தும் ஆசிரியர்,

பொறையிலா அறிவு போகப் புணர்விலா இளமை மேவத்

துறையிலா வனச வாவித் துகிலிலாக் கோலத் தூய்மை கறையிலா மாலை கல்வி கலமிலாப் புன்மை கன்னர்ச்

சிறையிலா நகரம் போலும் சேயிலாச் செல்வ மன்றே

- - * o என்கின்றார். குண்டலகேசி எனும் நூலும் இன்று நமக்கு முழுதும் கிடைக்கவிலலை. இந் நூலிற்குக் குண்டலகேசி

/

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/108&oldid=554099" இலிருந்து மீள்விக்கப்பட்டது