பக்கம்:காரும் தேரும்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் காப்பியங்கள் 107

விருத்தம்’ என்ற பெயருமுண்டு. வாழ்க்கையின் அவலத்தை ஒரு பாடல் நன்கு படம் பிடித்துக் காட்டுகின்றது.

பாளையாம் தன்மை செத்தும் பாலனம் தன்மை செத்தும் காளையாம் தன்மை செத்தும் காமுறு மிளமை செத்தும் மீளுமிவ் வியல்பு மின்னே மேவரு மூப்பு மாகி -- நாளுங்ாள் சாகின் றாமால் நமக்குகாம் அழாத தென்னே.

ஐஞ்சிறு காப்பியங்களில் சூளாமணி தவிரப் பிற நூல் களில் காப்பிய அமைதி சிறிதும் இல்லை. சிந்தாமணியின் தடை இடையிடையே தடைப்பட்ட நடை. ஆனால் சூளாமணியின் ந ைட செப்பமுற்ற- ஆற்றொழுக்கின் நடையாகும். சங்க காலத்திற்குப் பின் உண்டான காப்பி யங்களுள் ஒன்று பெருங்கதை. அது நடையமைப்பும் பொருட் சிறப்பும் கொண்டது. சிந்தாமணிக்கும் முற்பட்ட நல்ல காவியமாகும் இது. --

சிந்தாமணிக்குப் பிறகு தமிழ்க்காவிய உலகில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. அதுவரையில் வழக்கி விருந்த ஆசிரியப்பாவைக் கவிஞர்கள் கைவிட்டு, ஒசை நயத்திலும், சந்தத்திலும் மனத்தைச் செலுத்தினர். பழைய யாப்பு வரிசையில் கலிப்பா ஒசை நயம் மிக்கது. ஆனால் வெண்பாவும் ஆசிரியப்பாவும் சில நுண்ணிய வேறுபாடுகள் உடையனவேனும் பலவகை உணர்ச்சிகளுக்கு ஏற்பப் பல்வேறு ஒசை வேறுபாடுகளை அமைத்துக்காட்ட இடந்தருவன அல்ல. விருத்தப் பாவினைக் கம்பர் சிறக்கக் கையாண்டு ஒண்பா என்னும் உயர் விருத்தத்திற்குக் கம்பன்' என்ற பாராட்டினைப் பெற்றார்; சிந்தர்ம்ணி, பாடிய திருத்தக்க தேவரினும் விருத்தத்தினைச் சிறக்கப் பாடியுள்ளார். .

குகன் பரதனுடைய சேனையைக் கண்டு சினம் மிகுந்த நிலையில் பாடும் பாடலை நாம் படிக்கும்பொழுது நாமும் அத்தகைய மன நிலையை-கொதிப்பு நிலையை அடை

ன்ெறே ாம். - --- - * I. - - . . . . J ': ' -

ب - - التي

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/109&oldid=554100" இலிருந்து மீள்விக்கப்பட்டது