பக்கம்:காரும் தேரும்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் உணர்த்தும் பண்பாடு S

மேற்குறிக்கப்பெற்ற மேனாட்டு அறிஞர்களின் கருத் துரை கொண்டு பார்த்தால், பண்பாட்டினை உணர்த்த வல்ல இலக்கியங்களே மனித சமுதாயத்திற்குப் பயன்தரும் இலக்கியங்கள் என்பது போதரும். இந்த அளவுகோல் கொண்டு நந்தமிழ் மொழியில் எழுந்துள்ள செந்தமிழ் இலக்கியங்களைச் செவ்விதின் நோக்கினால் அவை பண். பாட்டினைப் பரக்கப் பேசும் பனுவல்களாக விளங்கக் காணலாம். தமிழன் என்ருேர் இனமுண்டு; தனியே அவர்கொரு குணமுண்டு’ என்ற தமிழ்க் கவிஞர்தம் கூற்றுப் படி, பழந்தமிழ்ச் சங்க இலக்கியங்கள் பழந் தமிழரின் பண் பாட்டினைப் பாறைசாற்றி நிற்கக் காணலாம்.

முதற்கண் பண்பாடு' என்ற பைந்தமிழ்ச்சொல்வினை எடுத்துக் கொள்வோம். நாகரிகம் என்ற சொல்லும் நம் மொழியில் உண்டு. நாகரிகம் என்ற தமிழ்ச் சொல்லிற்கு ஈடான ஆங்கிலச் சொல் Civilization என்பதாகும். இது போன்றே பண்பாடு' என்ற சொல்லிற்கியைந்த ஆங்கிலச் சொல் Culture என்பர். நாகரிகம் என்பதனைச் சிலர் நகர மக்களின் மனவளர்ச்சி என்றும் கூறுவர். சுருங்கக் கூறின் மனிதனின் உணவு, உடை, அணிமுதலிய புற வளர்ச்சியினை "நாகரிகம்' என்றும், மன வளர்ச்சியினை-அக வளர்ச்சி யினைப் 'பண்பாடு’ என்றும் குறிக்கின் வரும் இழுக்கொன்று மில்லை. நாகரிகத்தைப் பற்றிக் கூறவந்த வள்ளுவர்,

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் கயத்தக்க ாாகரிகம் வேண்டு பவர். - .

-திருக்குறள் : 580

என்று குறிப்பிட்டுள்ளார். தன்னோடு நீண்ட நாள் தோழ மையோடு பழகியநண்பன் நஞ்சையே உணவாகத் தந்தாலும் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்று உண்டாலே நாகரிகம் என்று ஆழத்தைப் புலப்படுத்துகின்ருர் திருவள்ளுவர். இக்கருத் தினையே நற்றிணை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/11&oldid=553989" இலிருந்து மீள்விக்கப்பட்டது