பக்கம்:காரும் தேரும்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O8. காரும் தேரும்

அஞ்சன வண்ணனென் ஆருயிர் நாயகன் ஆளாமே வஞ்சனை யாலர செய்திய மன்னரும் வந்தாரே செஞ்சரம் என்பன தீயுமிழ் கின்றன செல்லாவோ உய்ஞ்சிவர் போய்விடின் நாய்க்குகன் என்றெனை ஏசாரோ.

-கம்ப அயோ குகப்: 14

அதே குகன் சினம் தணிந்த நிலையில் கம்பர் பாடும் பாடலைப் பார்ப்போம்.

நம்பியுமென் நாயகனை ஒக்கின்றான் அயல்கின்றான் தம்பியையும் ஒக்கின்றான் தவவேடம் தலைகின்றான் துன்பமொரு முடிவில்லைத் திசைநோக்கித் தொழுகின்றான் எம்பெருமான் பின்பிறந்தோர் இழைப்பரோ பிழைப்பென்றான் - = . -கம்ப; அயோத் , குகப்; 30

இராமனை மயக்கும் நோக்கத்துடன் தன்னை நன்கு ஒப்பனை செய்துகொண்டுமெல்ல நடந்துவரும் சூர்ப்பனகை யின் நடை போலவே பாட்டும் வல்லோசையின்றி மெல் லோசை மிகுந்து நடைபோடுகின்றது.

பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச் செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடிய ளாகி அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும் வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்

-கம்ப. ஆரணிய: சூர்ப்ப; 31

முடிசூட்டு விழா, கைகேயினால் தடைப்பட்டுவிட்ட பிறகு இராமன் கோசலையின் கோயில் நோக்கிச் செல் கிறான். அப்போது அதனைக் கம்பர் பாடும் பாட்டு யாவர் மனத்தையும் நெகிழ்விப்பதாகும். இடத்திற்கேற்ற நன்டயமைப்பினைப் பெற்றுத் துலங்குகிறது செய்யுள்:

குழைக்கின்ற கவரி யின்றிக் கொற்றவெண் குடையுமின்றி. இழைக்கின்ற விதிமுன் செல்லத் தருமம்பின் னிரங்கியேக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/110&oldid=554101" இலிருந்து மீள்விக்கப்பட்டது