பக்கம்:காரும் தேரும்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் காப்பியங்கள் 109

மழைக்குன்ற மனையான் மெளலி கவித்தனன் வருமென்

றென்று தழைக்கின்ற வுள்ளத் தன்னாண் முன்னொரு தமியன் சென்

றான்.

-கம்ப, அயோத் நகர்; 2

அதிகரணி எனும் மடக்குவனியைக் கம்பர் பயன் படுத்தும் நயம் கண்டு தெளிக. கருத்திற்கேற்ற சந்தம் கீழ்க்காணும் பாட்டில் உளது.

வெய்யோணொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப் பொய்யோவெனு மிடையாளொடு

மிளையானொடும் போனான் மையோமர கதமோமறி

கடலோமழை முகிலோ ஐயோவிவன் வடிவென்பதோ

ரழியாவழ குடையான்.

-கம்ப; அயோத், கங்கை: 1

இவ்வாறாகக் காப்பியக் கவிஞர்கள் தம் காப்பியங் களில் தக்க இடங்களில் 'தக்க யாப்பிலும் தக்க சந்தத் திலும் தக்க வரிசை முறையிலும் சொற்களை அடுக்கி அமைத்துக் கவிதைக்கு அழகும் பொருளும் உணர்ச்சியும் வட்டியுள்ளார்கள். இது மகிழ்ந்து போற்றற்குரியதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/111&oldid=554102" இலிருந்து மீள்விக்கப்பட்டது