பக்கம்:காரும் தேரும்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. கல்வியும் கருத்தும்

உலகம் நாளுக்கு நாள் பல துறைகளில் மாற்றமும் முன்னேற்றமும் பெற்று வருகிறது: நேற்று இருந்தன. பல இன்று புறக்கணிக்கப்படுகின்றன: நேற்று இல்லாதன பல இன்று புதுமையாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. காலங் காலமாக அழியாது நிலைத்து நிற்பனவும் சில உள்ளன: இவற்றினை முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் வாழ்ந்து வருவன எனலாம். பழமை என்ற காரணத்தினாலே மட்டும் ஒரு பொருள் பாராட்டப் பெறுவதும் தகாது; அதே நேரத்தில் பழமை என்றவுடனேயேசீறிச் சினந்து அதனைப் பழித்து விடுவதும் முறையாகாது. இது போன்றே புதுமை என்றவுடனேயே பற்றிக்கொள்வதும் அல்லது பழித்தொதுக்குவதும் அறிவு டைமை யாகாது. அவ்வப்பொருளின் அவசியத்தினை அலசி ஆராய்ந்து பின்னரே ஒரு முடிவிற்கு வரவேண்டும். இதனைச் சிவப்பிரகாசம் என்னும் சைவ சித்தாந்த நூல்,

தொன்மையவாம் எனும் எவையும் நன்றாகா இன்று தோன்றிய நூல் எனும் எவையும் தீ தாகா

என்று குறிப்பிடுகின்றது.

மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள் முதலியன அன்றுபோல் இன்றும் தேவைப்படு கின்றன. பழங்காலத்து மனிதனின் உ ணவு உடை உறையுள் முதலியன முற்றிலும் இன்று மாறுபட்டிருக்கலாம். ஆயினும் இம்மூன்றும் அன்றைய மனிதனுக்கும் தேவைப்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/112&oldid=554103" இலிருந்து மீள்விக்கப்பட்டது