பக்கம்:காரும் தேரும்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வியும் கருத்தும் 111

விஞ்ஞான உலகத்தில் வாழும் இன்றைய மனிதனுக்கும்:

தேவைப்படுகின்றன. சிரிப்பு, அழுகை, இழிப்பு, வியப்பு, அச்சம், வீரம், சினம், மகிழ்ச்சி முதலாய மனிதனின் அடிப்படைப் பண்புகள்-குருதியோடு கலந்த உயிர்ப்பண்பு o கள் காலத்தால் மர்றுவதில்லை. தொல்காப்பியனார், -

நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப

o -தொல்: மெய்ப்பாட்டியல்: 3

என்று குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள பண்புகள்-உணர்வுகள் இன்றும் மனித சமுதாயத்தில் நிலைத்து வேரூன்றி நிற்கக் காண்கிறோம். இப்பண்புகளை -உணர்வுகளைக் காவ வெள்ளமோ, சூழ்நிலையோ சிதைக்க வில்லை; மாறாக வழிவழிச் சிறந்து இவை வாழ்வு பெற்று வருகின்றன. ஜோட் என்னும் மேற்புலத்து

அறிஞர் பெருமகனார், உணர்ச்சிகளையும் வேட்கை களையும் பொறுத்த வரையில் நாம், நம் முன்னோர்களைப் போன்றே உள்ளோம். பழங்காலத்து மனிதர்களைப்

போலவே விரும்புவதிலும் வெறுப்பதிலும் இக்காலத்து மனிதர்கள் அவர்களிடமிருந்தும் தங்களிடமிருந்தும் மிகச் சிறிதே வேறுபடுவர். அறிவாற்றலின் எல்லையைப் பொறுத்துத்தான் வேறுபாடுகள் தோன்றுகின்றன. ’1 என்று புதிய எண்ணங்களுக்கு வழிகாட்டி என்ற தமது நூலில்

". .."

1. At the level of the emotions and the appetites we are all very much alike. Contemporary human beings when hating and loving differ very little among themselves: more-over, they differ very little from human beings hating and loving in the paleolithic age. It is only at the level of their intellect that differences emerge •

—c. E. M. Joad. Guide to Modern thought p. 251

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/113&oldid=554104" இலிருந்து மீள்விக்கப்பட்டது