பக்கம்:காரும் தேரும்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 காரும் தேரும்

குறிப்பிட்டுள்ளமை ஈண்டு கருதற்குரியது. இவற்றால் மனிதன் பல துறைகளில் பழமையைப் போற்றிப் பாராட்டி யும், பல துறைகளில் பழமையைப் போற்றி வரவேற்றும் . வாழ்ந்துவளர்ந்து வருவது காண்கிறோம். இவ்வாறு பழமை - - கழிந்து புதுமை பூப்புதனை நன்னூலாசிரியர் பவணந்தி முனிவர்,

பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல; கால வகையி னானே

-நன்னூல்: உயிரியல் : 21

என்று குறிப்பிட்டுள்ளார். அவர் எழுதிய நன்னுரலே தொல்காப்பியத்தினைப் பலவிடங்களில் பின்பற்றியும், சிலவிடங்களில் மாறுபட்டும் புதுவழி கொண்டும் இயங்கக்

காணலாம்.

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று கல்வி யாகும். கல்வி சிறந்த தமிழ்நாடு’ என்றார் பாரதியார். " மணலில் உள்ள கிணற்றில் தோண்டிய அளவிற்குத் தண்ணிர் சுரக்கும்; அதுபோல் மக்களுக்குக் கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும் என்கிறார் திருவள்ளுவர்.

தொட்டனைத் துறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் துாறும் அறிவு.

-திருக்குறள்: 396

எண்ணும் எழுத்தும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்றும், கல்லாதவரை முகத்தில் இரண்டு புண்ணுடையார் என்றும், கற்றவர்க்கு எங்குச் சென்றாலும் சிறப்பு கிடைக்கும் என்றும் கல்வியின் சிறப்பைப் பலவாறு கூறிய திருவள்ளுவர் மற்றப் பொருளினும் சிறந்த அழிவில்லாத செல்வம் கல்வியே என்றும் கூறியுள்ளார்.

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றயவை.

-திருக்குறள்: 400

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/114&oldid=554105" இலிருந்து மீள்விக்கப்பட்டது