பக்கம்:காரும் தேரும்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வியும் கருத்தும் 113

கல்வி யழகே அழகு என்றும், மம்மர் அறுக்கும் மருந்து என்றும் நாலடியார் கல்வியின் சிறப்பினைக் கூறும். களர் நிலத்தில் விளைந்த உறுப்பினைக் கழனியில் விளைந்த நெல்லினும் விழுமிதாகச் சான்றோர் கொள்வர் என்றும், அதனால் கற்றவர் தாழ்ந்த குலத்தில் தோன்றிய வராக இருப்பினும் சான்றோரால் உயர்வாக மதிக்கப் படுவர் என்றும், நாலடியார் மேலும் குறிப்பிட்டு, ஒருவன் தன் மகனுக்கு அளிக்கவேண்டிய செல்வம் கல்விச் செல்வமே என்றும் குறிப்பிடுகின்றது- _

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கல்விச்செல்வத்தின் மேன்மையை நன்குணர்ந்தவன். புரவலனாக விளங்கிய அப்பெரு மன்னன் புலவனாகவும் விளங்கி எழுதிய பாடல் ஒன்று புறநானுாற்றில் காணப்படு கின்றது. அப்பாடல் வருமாறு

உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே பிறப்போ ரன்ன வுடன்வயிற் றுள்ளும் சிறப்பின் பாலால் தாயுமணங் திரியும் ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக வென்னா தவருள் அறிவுடை யோனா றரசுஞ் செல்லும் வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும் - கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே.

-புறம்: 183

தன் ஆசிரியர்க்கு ஒர் இடையூறு ஏற்பட்ட விடத்து தீர்ப்பதற்கு வந்து உதவியும், மிக்க பொருளைக் கொடுத் தும் வழிபாட்டு நிலைமையை வெறாதும் கற்றல் ஒருவ னுக்கு அழகிதாகும். ஏனெனில் பிறப்பால் ஒரு தன்மையும் ஒரு வயிற்றுப் பிறந்த ஒற்றுமையும் உடையவர்களாயிருப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/115&oldid=554106" இலிருந்து மீள்விக்கப்பட்டது