பக்கம்:காரும் தேரும்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 காரும் தேரும்

பினும் அவர்களில் கல்வி கற்ற ஒருவனையே பெற்றெடுத்த தாய் பெரிதும் விரும்புவாள். ஒரு குடியில் பிறந்த பலருள் ளும் வயதில் மூத்தோனை வருகவென்று அழைக்காமல், அவருள் அறிவில் மிகுந்தவனையே தன்னிடம் அழைத்து அவன் உரைக்கும் அறிவுரைப்படியே அரசனும் அரசியல் நடத்துவான். வேறுபாடு தெரியப்பட்ட நாற்குலத்துள்ளும் கீழ்க் குலத்தானென்று பாராது கல்விபொருட்டு ஒருவனுக்கு உயர்வு உண்டாவது உறுதியாகும்’-இத்தகைய கருத்துக் கள் இப்பாடலால் தெளிவாகின்றன. இக்கருத்தினையே நான்மணிக்கடிகை, ஒருகுடியிற் கல்லாது மூத்தானைக் கைவிடுபு, கற்றான் இளமை பாராட்டும் உலகு" என்றும், வெற்றி வேற்கை, அறிவுடையான் ஒருவனை அரசனும் விரும்பும் என்றும் குறிப்பிடுகின்றன.

இவற்றால் கல்வி கற்றாரே பிறர் கருத்தில் நிற்பர் என்பதும், அவர் வாழ்வே முழுமை நிறைந்த வாழ்வு என்பதும், கல்வியற்றோர் வாழ்வில் ஒளி குறைந்து இருள் நிறைந்து காணப்படும் என்பதும் தாமே போதரும்.

பழங்காலக் கல்வி முறைக்கும் இக்காலக் கல்வி முறைக் கும் இடையே பெரியதொரு வேறுபாட்டினைக் காணலாம். அக்காலத்தே எல்லோரும் படித்திருக்க வேண்டும் என்று நினைக்கவுமில்லை; அவ்வாறு நினைத்திருப்பினும் அந் நினைவினை நனவாக்கிக்கொள்ள வாய்ப்பும் வசதியும் அவர்கள் பெறவில்லை. அவரவர்கள் தத்தமக்குரிய தொழில்களைத் தவறாது முறைப்படி ஆற்றி வருவதே இயைவது என்று கருதப்பட்டது. குரு குலக்கல்வி முறை" அந்நாளில் நிலவியது. மாணவர்கள் நல்ல ஆசிரியரை நாடிச் சென்று, சிலவாண்டுகள் அவரோடு உடனுறைந்து கல்வி கற்று முழுமை பெற்றுத் தத்தம் இடங்களுக்குத் திரும்பினர். அவர்கள் வாழ்ந்த காலம் ஏடும் எழுத்தாணியுமே இருந்த காலம். ஆசிரியர் மனப்பாடமாகத் தாம் கற்ற கல்வியைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/116&oldid=554107" இலிருந்து மீள்விக்கப்பட்டது