பக்கம்:காரும் தேரும்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரும் தேரும் 116

என்று கூறியிருப்பதனால் பவணந்தியார் காலத் ற்கு முன்பே விளங்கிய கல்வி கற்குநிலை புலனாகின்றது.

ஆனால், இக் காலத்தில்-குறிப்பாக இந்த நூற் றாண்டில்-விஞ்ஞான வளர்ச்சி காரணமாக வாழ்வின் பல துறைகளிலும் வசதிகள் பெருகிவிட்டன. மரத்தடிகளே அக் காலக் கல்வி நிலையங்களாக விளங்க இப்பொழுது பெரிய பெரிய கட்டடங்கள் பள்ளிகளாகவும், கல்லூரிகளாகவும், பல்கலைக் கழகங்களாகவும் விளங்கக் காண்கிறோம். எங்கோ சிலர் அக் காலத்தில் ஆசிரியத் தொழிலில் பணி யாற்ற, இக் காலத்தே பலர் அப் பணியில் ஈடுபட்டிருப்ப தைக் காண்கிறோம். ஏடும் எழுத்தாணியும் இருந்த இடங் களைத் தாளும் (பேப்பரும்) எழுதுகோலும் (பேனாவும்) கைப்பற்றி நிற்பது கண்கூடு . படிக்கும் மாணவர் தொகை யில் பெண்களின் தொகையும் பெருகி வருவதனைக் காண் கிறோம். கல்வியில்லாத பெண்கள் களர் நிலம் என்றும், கல்வியையுடைய பெண்கள் திருத்தம் செய்யப்பட்ட நன்செய் நிலம் என்றும், கல்வி கற்ற பெண்கள் நல்ல பிள்ளைகளைப் பெற்றெடுப்பர் என்றும் புர ட்சிக் கவிஞர் பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார்.

கல்வியில் லாத பெண்கள் களர்கிலம்! அங்கிலத்தில் புல்விளைந் திடலாம்: நல்ல புதல்வர்கள் விளைதல் இல்லை கல்வியை உடைய பெண்கள் திருந்திய கழனி! அங்கே நல்லறி வுடைய மக்கள் விளைவது நவில வோகான்?

கம்பர் கோசல நாட்டு மகளிரைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது அம் மகளிர் கல்வியும் செல்வமும் நிறைந்து, நாள்தோறும் விருந்தினரைப் போற்றி நல்வாழ்வு நடத்து கின்றனர் என்று கூறியுள்ளார்: . . .

பெருந்த டங்கண் பிறைநுத லார்க்கெலாம் பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/118&oldid=554109" இலிருந்து மீள்விக்கப்பட்டது