பக்கம்:காரும் தேரும்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வியும் கருத்தும் 117

வருக்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் - * * விருந்தும் அன்றி விளைவன யாவையே?

இவற்றால் பெண் கல்வியின் பெருமை புலனாதல்

காணலாம்.

  • - o

'அகில வுழுவதிலும் ஆழ உழு' என்பது பழமொழி. அக்காலத்தே பல புலவர்கள் தம் வாழ்நாளில் ஒரு சில நூல்களையே திரும்பத் திரும்பப் பயின்று அந்தந்த நூல் களில் வல்லவர்களாக விளங்கினார்கள். ஆனால் இன்று அத்தகைய நிலை இல்லை; அம் மரபில் வந்தோர் தொகை அருகிவருகின்றது. இக்காலப் பாடத்திட்டத்தில் மாணவர் கள் பலவற்றைப் பற்றியும் ஓரளவாவது தெரிந்திருக்க வேண்டும் என்று வரையறுக்கப்படுகிறது. மேலும் அக்கால மாணவர்களைக் காட்டிலும் இக்கால மாணவர்கள் வாழ்வில் கவர்ச்சிகள் பல உள்ளன. அன்று பரபரப்பை ாட்டும் செய்தித்தாள்கள் இல்லை; கதைகளும் கட்டுரை களும் தாங்கிவரும் வார, திங்கட் பத்திரிகைகள் இல்லை; ஆங்காங்கே அரசியல் மேடைகளில் ஒலிக்கும் சூடான கருத்துகள் செவிகளைத் தாக்கவில்லை; அனைத்தினும் மேலாக, கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கும் திரைப்படங்கள் இல்லை. அக் காலத்து மாணவனைத் தனி யொருவராகப் பெரிதும் ஆசிரியரே உருவாக்கினார். இக் காலத்தே மாணவனை உருவாக்கும் பொறுப்பு, பலர் கையில் உள்ளது. மேலும் இக்காலக் கல்வி விளக்கத் திற்கு-அறிவு மேம்பாட்டிற்கு என்றில்லாமல், வயிற்றுப் பாட்டிற்கு வழி ©ᏂᏗ ©y 5 செய்யும் வருவாய்க்குரிய வகைதேடும் ஒன்றாகவே உள்ளது. அண்ணல் காந்தி யடிகள் அவர்கள் இக்காலக் கல்வியினைப் பணியாளர் களை (clerks) உற்பத்தி செய்யும் சாதனம்’ என்று குறை கூறியுள்ளமையும் ஈண்டு நினைவுகூரத்தக்கது. வகுப் பறையில் மாணவர் பயிலும் பாடத்திட்டக் கல்வியை

«Ягт—– 8 . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/119&oldid=554110" இலிருந்து மீள்விக்கப்பட்டது